பாரதிதாசன் கவிதைகள்-1 :
சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்! அடடே, செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்!
- பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பிலிருந்து’ ஒரு பகுதி.



January 5, 2010 at 10:18 pm
பாவேந்தரின் இந்த கவிதைகளை படிக்கும் பொது இனிய தமிழ் கவிதைகள் எத்தனையோ நாம் படிக்காமல் விட்டுவிடுகிறோம் என வருத்தமாக உள்ளது.