இன்று ஒரு தகவல்-13: "கல்லூரிகளில் இரண்டு லட்சம் கோர்ஸ்கள்"

உலகம் முழுவதும் உள்ள சுமார் பத்தாயிரம் உயர்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இரண்டு லட்சம் கோர்ஸ்களைப் பற்றிய தகவல்களை அணுக வழிவகை செய்கிறது “ஸ்டடிப்லேஸஸ்.காம்” (http://www.studyplaces.com) என்ற போர்ட்டல். இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், கனடா, மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு இணைப்பு வழங்குகிறது. நம்பகமான தகவல்களுடன், ஆலோசனையும் வழங்குகிறது.
நன்றி: தினமலர், மதுரை, அக்டோபர் 13, 2008. (அறிவியல் ஆயிரம்).

இன்று ஒரு தகவல்-12: "இன்று கை கழுவும் தினம்"

இன்று சர்வதேச கை கழுவும் தினம். இதையொட்டி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்ற ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஏழு கட்டளைகளை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது:
1. பள்ளியில் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளனவா என்பதைக் கண்காணிக்க மாணவர்கள் அடங்கிய குழுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. அடுத்த ஆண்டிற்கான சுகாதாரச் செயல்களை திட்டமிட ஒரு சிறப்புச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.
3. பள்ளி அறை மற்றும் வளாகத்தை சுத்தம் செய்யவேண்டும்.
4. மதிய உணவுக்குமுன் அனைவரும் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவவேண்டும்.
5. திறந்த வெளியில் மலம் கழிக்க மாட்டோம், கழிவறையை பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும்.
6. சாப்பிடுவதற்கு முன்பும், மலம் கழித்த பின்னும் கைகளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும்.
7. சோப்பைப் பயன்படுத்திக் கைகளைக் கழுவுவது மற்றும் மலம் கழிக்க கழிவறைகளைப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை கிராம மக்களிடையே ஏற்படுத்தவேண்டும். சுத்தமான கைகளே ஆரோக்கியத்தின் அடையாளம் என்ற விழிப்புணர்வுக் கையேடு யுனிசெப் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் இதைப் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பயன்படுத்தவேண்டும்.
நன்றி: தினமலர், மதுரை, அக்டோபர் 16, 2008.

இன்று ஒரு தகவல்-11: "சென்னையில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி"

மத்திய மாநில அரசுகளின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறைகள் இணைந்து சென்னையில் நடத்திய தாய் சேய் நலக் கருத்தரங்கில் பேசிய அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி அவர்கள் பேசியதிலிருந்து:

* சென்னையில், அரசு சார்பில் ஒரு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியை நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படும்.
* மாவட்டம்தோறும் ஹோமியோபதி மருத்துவப் பிரிவுகள் தொடங்கப்படும்.
* மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, ஒரு முன்மாதிரிக் கல்லூரியாக செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* வரும் ஆண்டிலிருந்து திருமங்கலம் கல்லூரியில் முதுகலைப் படிப்பு தொடங்கப்படும்.

தமிழக அரசின் மக்கள் நலவாழ்வுத் துறை முதன்மைச் செயலர் சுப்புராஜ் பேசியது:
* இந்திய அரசொடயும் இணைந்து மாநில அளவில் தாய்-சேய் நல இயக்கத்தைத் துவக்கியுள்ளோம்.
* பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விளம்பரப் பிரதிகள், புத்தகங்கள், கருத்துரைகள் மற்றும் விளம்பரக் குறும்படங்களை ஹோமியோபதி மருத்துவ தாய்-சேய் நல இயக்கம் வெளியிட்டுள்ளது.
* ஹோமியோபதி மருத்துவத்தின் தனித்தன்மையை மக்கள் அறிய முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
நன்றி: தினமலர், மதுரை, அக்டோபர் 13, 2008.

இன்று ஒரு தகவல்-11: ‘டிவி’ அணைக்கும் வாரம்

‘டிவி’ பார்க்காதீர்கள்; அதற்குப் பதிலாக புத்தகம் படியுங்கள்; நன்றாகத் தூங்குங்கள்!’ – இப்படி ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரம் அமேரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சராசரி அமெரிக்கர் வாரத்திற்கு முப்பத்திரண்டு மணி நேரம், வருடத்திற்கு ௧௭00 மணி நேரம் டிவி பார்க்கிறார். மேலும் அமெரிக்காவில் உள்ள நெல்சன் மண்டேலா மருத்துவ ஆராய்ச்சி மைய நிபுணர்களின் ஆராய்ச்சி கூறும் தகவல்கள்:

டிவி பார்ப்பதால் நம் சாப்பிடும் பழக்கம் மாறுகிறது; தூக்கம் கெடுகிறது. இதனால், உடல் எடை போட்டு, சோர்வு முதல் எல்லாக் கோளாறுகளும் வருகிறது.

அதிகமாக டிவி பார்ப்பதைத் தடுக்க, அமெரிக்காவில் ஆண்டு தோறும் ‘டிவி அணைக்கும் வாரத்தை’ சில அமைப்பினர் கடைப்பிடிக்கின்றனர்.

நன்றி: தினமலர், வாரமலர், அக்டோபர் 5, 2008.

இன்று ஒரு தகவல்-10: "ஷமத்", இணைய நாளிதழ்

பீஹார் மாநிலத்தில், ஆறு குடும்பத் தலைவிகள் சேர்ந்து, ‘ஷமத்’ என்ற இணைய நாளிதழை, பீஹாரின் பழைமையான, ‘மைதிலி’ மொழியில் ஆரம்பித்துள்ளனர்.

பீஹார் என்றாலே அடிதடி, கொள்ளை, கொலை, கடத்தல் அதிகம் நடக்கும் மாநிலம் என்ற அவப்பெயரை நீக்க, சாதகமான செய்திகளை வெளியிட்டு, பீஹாருக்குப் பெருமை சேர்ப்பதுதான் எங்கள் ஆன்-லைன் நாளிதழின் நோக்கம் என்கின்றனர் இந்தப் பெண்கள்.

குமுத் சிங், ப்ரீதிலதா மாலிக், மம்தா சங்கர், சுஷ்மா, சவ்வி ஆகிய ஐந்து பெண்கள் மற்றும் அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத இன்னொரு பெண்ணும்தான் இந்தப் பத்திரிக்கையை நடத்துகின்றனர். இவர்களுக்குப் பின்னணியில் இருந்து மேற்பார்வையிடுவது குமுத் சிங்கின் கணவர் ஜா. இவரும் ஒரு பத்திரிக்கையாளரே.ஜோல்னா பையன்.

நன்றி: தினமலர், வாரமலர், செப்டம்பர் 2008 & ஜோல்னா பையன்.

இன்று ஒரு தகவல்-9: "சின்னமோன் டீல் புக்ஸ்"

www.cinnamontealbooks.com

புத்தகம் வெளியிட முடியாத எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை இந்த இணைய தளத்தில் வெளியிடலாம். படிக்கும் வாசகர்களுக்கு அந்த எழுத்துக்கள் பிடித்திருந்து புத்தகம் கேட்டால், உடனடியாக அச்சடிக்கப்பட்டு நன்றாக பைண்ட் செய்யப்பட்ட பிரதி அவர்களுக்கு அனுப்பப்படும். ஒரே ஒரு புத்தக ஆர்டர் என்றாலும் கூட ஏற்றுக்கொள்ளப்படும் என்பதுதான் விஷேசம். தொகுப்புப்பனிகள், பிழை திருத்தங்கள் போன்றவற்றுக்கு தேவைப்பட்டால் குறிப்பிட்ட தொகைக்கு ஏற்பாடு செய்கிறது. ‘பிரின்ட் ஆன் டிமாண்ட்’ என்ற இந்த ஆன்லைன் வெளியீட்டு வடிவம், வெளிநாடுகளில் பிரபலம்!

நன்றி: `விகடன் வரவேற்பறை’, ஆனந்த விகடன்’, நவம்பர் 28, 2007.

இன்று ஒரு தகவல்:

இந்தியாவில் 800க்கும் மேற்பட்ட பயங்கரவாதக் கும்பல்கள் வெளிநாடுகளின் உதவியோடு செயல்படுவதாகக் கூறியுள்ளார் இந்திய அரசின் தேசீயப் பாதுகாப்பு ஆலோசகர் திரு.நாராயணன்.

நன்றி: ஆனந்த விகடன், ஆகஸ்ட் 27, 2008.

இன்று ஒரு தகவல்-3: "உன்னத சேவை"

ஜோஸ், மதுரையைச் சேர்ந்த இந்த 59 வயது இளைஞர், சத்தமில்லாமல் மிகப்பெரிய சாதனை செய்து வருகின்றார். கடந்த 37 ஆண்டுகளில் 147 முறை இரத்த தானம் செய்திருக்கிறார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் இருபது பேருக்காவது அறுவை சிகிச்சை நடக்கிறது. இவர்களுக்கு அறுபது யூனிட் வரை இரத்தம் தேவைப்படுகிறது. ஆஸ்பத்திரியில் செஞ்சிலுவைச் சங்கத்தை அதன் இணைச்செயலராக இருந்து நிர்வகித்து வருகிறார் ஜோஸ். அவருக்குக் கீழ் முன்னூறுக்கும் மேற்பட்ட கொடையாளர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் இரத்த தானம் செய்யத் தயாராக இருக்கின்றனர். உயிர் காக்கும் உன்னத சேவைபுரியும் இவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள். (அடிப்படை: தினமலர், மதுரை, ஜூலை 27, 2008)

இன்று ஒரு தகவல்-2: "வீடீயோ கேம் பிசினஸ் ரூபாய் இரண்டு லட்சம் கோடியைத் தாண்டியது!"

வீடீயோ கேம் பிசினஸ் அமெரிக்காவில் ஆரம்பித்து சீனா வரை கொடிகட்டிப் பறக்கிறது. மைக்ரோஸாப்த் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் 360, சோனியின் பிளே ஸ்டேஷன் 3, ஆகியவற்றுடன் இப்போது நின்டெண்டோவின் வீடயோ கேம் ஆகியவையும் விற்பனையாகின்றன. அடுத்த ஐந்தாண்டில் வீடீயோ கேம் வர்த்தகம் பல மடங்கு பெருகும்.

(நன்றி: தினமலர், மதுரை, ஜூலை 27, 2008)

இன்று ஒரு தகவல்-1: "பீஜிங் ஒலிம்பிக்"

இன்று ஒரு தகவல்: “பீஜிங் ஒலிம்பிக்”
————————————————————
உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒலிம்பிக் போட்டிகள் சீனத் தலைநகர் பீஜிங்கில் கோலாகலமாக துவங்கவிருக்கின்றன. எண் எட்டைக் (8) கண்டால் இந்தியாவில் பலருக்கு அலர்ஜி. ஆனால் இந்த ஒலிம்பிக் போட்டி துவங்கும் நாள் மற்றும் நேரம் அனைத்திலும் எட்டுதான். 2008ம் ஆண்டின் எட்டாவது மாதமான ஆகஸ்டில், எட்டாம் நாள், சீன நேரப்படி இரவு எட்டு மணி, எட்டு நிமிடம், எட்டு வினாடிக்கு நேஷனல் பேர்ட்ஸ் நெஸ்ட் (பறவைக்கூடு வடிவில் அமைந்தது) ஸ்டேடியத்தில் (National Birds’ Nest Stadium) ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகின்றன. நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் இந்த 08-08-08-08-08-08 காம்பினேஷனில் (வருடம்-மாதம்-நாள்-மணி-நிமிடம்-வினாடி) ஒலிம்பிக் போட்டிகளை துவக்குவதில் சீன அரசும், ஒலிம்பிக் கமிட்டியினரும் பெருமை கொள்கின்றனர்.

நன்றி: தினமலர், மதுரை, (ஒலிம்பிக் ஸ்பெஷல்), ஆகஸ்ட் 1, 2008.

ஒரு மனிதர் – ஒரு இயக்கம் – 12 கோடி மரங்கள்

36 கோடி இந்தியர்கள் பத்திரிக்கை படிப்பதில்லை!

ஆண்டுக்கு ஒரு லட்சம் உதவித் தொகை!

Follow

Get every new post delivered to your Inbox.