இன்றைய சிந்தனைக்கு-30: "கண்ணி்ற்கழகு"

கண்ணிற்கு அழகு சேர்ப்பது தாட்சண்யம் என்னும் கருணையுள்ள அருட்பார்வை மட்டுமே. அப்படியில்லாமல் பிறரது துன்பத்தைக் கண்டுகொள்ளாமல் செல்பவனின் கண்கள் இரண்டும், முகத்தில் இருக்கும் புண்கள் போன்றதாகும். – திருவள்ளுவர்.
நன்றி: தினமலர், மதுரை, “ஆன்மிகம் அறிவோமா, 18.11.2008.

இன்றைய சிந்தனைக்கு-29:

அன்பு இல்லாத அறிவு இருள்!
அன்பும் அறிவும் இணைந்தால்தான் அருள்!

- தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

இன்றைய சிந்தனைக்கு-28: "ஆயிரம் உண்டிங்கு ஜாதி" – சுஜாதா

ஞாயிற்றுக்கிழமைகளில் நான் தவறாமல் பார்ப்பதுஹிந்து பத்திரிக்கையின்மேட்ரிமோனியல்விளம்பரங்களை. எனக்குக் கல்யாண உத்தேசம் எதுவும் இல்லை. அது முப்பத்தேழு வருடங்களுக்கு முன்னேயே நிகழ்ந்து, சண்டை போட சப்ஜெக்ட் தீர்ந்துபோய், நானும் மனைவியும் ஒரு சமநிலைக்கு வந்துவிட்டோம்.

ஹிந்துவின் இந்தத் திருமணப் பக்கங்கள் நம் சமூகத்தின் உண்மையான குறிகாட்டி. இந்த நாட்டில், குறிப்பாகத் தென்னாட்டில் அத்தனை சாதிகளும் பத்திரமாக இருக்கின்றன என்பதற்கு அத்தாட்சி.

உதாரணம்ஆர்.சி.வன்னியர், தெலுகு பிராடஸ்டன்ட், கிறிஸ்டியன் நாடார், ரோமன் கத்தோலிக், கள்ளர் முக்குலத்தோர், தமிழ் முஸ்லீம், சன்னி உருது, பலிஜா நாயுடு, கேரளைட் விஸ்வகர்மா, வன்னியகுல க்ஷத்ரியர், வடமா பரத்வாஜா, வடகலை தைத்திரிய காசியபம்!

ஆயிரம் உண்டிங்கு ஜாதிஇது
ஞாயிறுதோறும் தவறாத சேதி” – என்று பாரதி இப்போது பாடியிருப்பார்.

இதை நான் தனிப்பட்ட விமர்சனம் செய்வதைவிட, இதில் பொதிந்துள்ள சமூகவியல் செய்திகள் தாம் முக்கியமாகப்படுகின்றன.

1. சாதி இல்லை என்ற கொள்கை வீட்டுக்கு வெளியே மற்றவர்களுக்கு.
2. தங்கள் குடும்பத்துக்கு வரும்போது மட்டும் சாதி பாராட்டுகின்றனர். இதற்குப் பல யதார்த்தமான காரணங்கள் இருக்கலாம். உணவுப் பழக்கங்கள், மொழி, பெறப்போகும் பிள்ளைகள் குழப்பம் இல்லாமல் வளர்வது.
3. பிராம்மணர்கள் மட்டுமின்றி அனைத்து வர்க்கத்தினரும் சாதி பாராட்டுகின்றனர் – கல்யாணம் என்று வரும்போது.
4. ‘கிரீன் கார்டு ஹோல்டர்என்கிற புதிய சாதி உருவாகிக் கொண்டிருக்கிறது.

வேலைவாய்ப்பு, மெடிக்கல் அட்மிஷன்இவற்றுக்கு சாதி தேவைப்படுவது வேறு விஷயம். இவற்றை மீறித்தான் கலப்புத் திருமணங்கள் நிகழ்கின்றன. அதுவும், வேறு விஷயம். அதன் பின்னும் சாதிகள் பத்திரமாக இருப்பதுதான் செய்தி. உதாரணம்
Mother Brahmin, Father Vanniyar, 26 – Poorattathy, Multinational company, Five figure salary, seeks graduate girl Brahmin or pure vegetarian.

இந்த விளம்பரத்தில் ஒரு நாவலுக்குரிய சமாசாரமே அடங்கியிருக்கிறது.

நன்றி: ஆனந்தவிகடன், 11.4.1999

இன்றைய சிந்தனைக்கு-27:

சமுதாயத் தொண்டில் ஆன்மீகக் கண்ணோட்டம் இல்லையேல் அது பயனற்றுப்போகும். – காந்திஜி

இன்றைய சிந்தனைக்கு-26: "கொடுப்பதுதான் வாழ்வு"

* உன் நண்பனுக்கு தோள் கொடு.
* உன் பகைவனுக்கு மன்னிப்பைக் கொடு.
* உன் தலைவனுக்கு நேர்மையைக் கொடு.
* உன் பெற்றோருக்கு பெருமையைக் கொடு.
* உன் சுற்றத்தார்க்கு அன்பைக் கொடு.
* உன் குழந்தைக்கு முன்மாதிரியைக் கொடு.
* உன் மனிதத்தன்மைக்கு உழைப்பைக் கொடு.
* உன் கடவுளுக்கு உன் வாழ்க்கையைக் கொடு.
- மா.லட்சுமிப்பிரியா, பதினோராம் வகுப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
நன்றி: தினமலர், மதுரை, அக்டோபர் 13, 2008.

இன்றைய சிந்தனைக்கு-25:

கொடிய விஷத்தைக்கூட ஒருவன் உள்ள உறுதியோடு பொருட்படுத்தாதிருந்தால், அவ்விஷம் சக்தியற்றதாகிவிடும். மனதின் வலிமையை உணர்ந்துகொண்டவனால் சாதிக்க இயலாத காரியம் எதுவுமில்லை.சுவாமி விவேகானந்தர்.

நன்றி: தினமலர், மதுரை (ஆன்மிகம் அறிவோமா)

இன்றைய சிந்தனைக்கு-24:

நமக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் நமக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன. அதனால் எந்த உதவியையும் நீங்கள் பிறரிடத்தில் எதிர்பார்க்கத் தேவையில்லை. – சுவாமி விவேகானந்தர்.
நன்றி: தினமலர், மதுரை, (ஆன்மிகம் அறிவோமா)

இன்றைய சிந்தனைக்கு-23:

நம்மால் எதுவும் செய்யமுடியவில்லை என்ற சோர்வை விட்டுத்தள்ளுங்கள். நடந்து முடிந்ததை எண்ணி, மனதில் சுமையாக வைத்துக்கொள்ளாதீர்கள். இருப்பது எதுவானாலும் அதை உற்சாகமாக எடுத்துக்கொள்ளுங்கள். எந்தச் செயலையும் முயற்சி எடுத்து நல்லமுறையில் செய்ய முற்படுங்கள். அதில் கிடைக்கும் வெற்றி உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். பிறருக்கு உதவியாக இருந்து, மன நிலையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதே சொர்க்கம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயலாமையை எண்ணி மனம் புழுங்கி தன்னை வருத்திக் கொள்வதே நரகம். நல்லவர்களின் சேர்க்கை, நல்ல எண்ணங்கள் ஆகியவற்றில் ஆர்வத்தோடு ஈடுபடுவது உள்ளத்திற்கு டானிக் போல உதவும். – ஸ்ரீ சத்ய சாய்பாபா.
நன்றி: தினமலர் – ஆன்மிகம் அறிவோமா

இன்றைய சிந்தனைக்கு-22:

சிந்திக்காமல் படிப்பது பயனற்றது.
படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது.

இன்றைய சிந்தனைக்கு-21:

ஒரு பொருளின் மதிப்பு அதன் விலையைப் பொறுத்து கிடையாது. அப்பொருளைக் கொடுத்தவரின் அன்பைப் பொறுத்தே அப்பொருள் மதிப்பு பெறுகிறது. சிறியதோ, பெரியதோ அன்பினால் எந்தப் பொருளும் மதிப்புடையதாகிவிடும். – அன்னை சாரதாதேவி

இன்றைய சிந்தனைக்கு-20:

ஞானி எதையும் தனக்குள்ளே தேடுகிறார். பைத்தியக்காரர் எல்லாவற்றையும் பிறரிடமிருந்து எதிர்பார்க்கிறார். – லியோ டால்ஸ்டாய்

இன்றைய சிந்தனைக்கு-19:

நல்ல லட்சியத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த லட்சியத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அதைப் பின்பற்றியே வாழ்க்கை நடத்துங்கள். மூளை, தசைகள், நரம்புகள் மற்றும் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த லட்சியமே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இதுதான் வழி.
- சுவாமி விவேகானந்தர்

இன்றைய சிந்தனைக்கு-18:

இயற்கை அளிக்கும் செல்வங்களை அளவோடு ஏற்று அனுபவியுங்கள். உங்கள் ஆசைக்கும் ஒரு வரையறையை வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் இயற்கை நம் வாழ்க்கை வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும். வாழ்க்கையை அனுபவிப்பதில் இனிய நேய உணர்வு இருத்தல் வேண்டும். வண்டு மலரில் தேனைப் பருகுவது போல, இயற்கையை மனிதன் மென்மையான உணர்வோடு அணுக வேண்டும்.
பகவான் ஸ்ரீ சத்யா சாய்பாபா

நன்றி: தினமலர், மதுரை, செப்டம்பர் 18, 2008 (“ஆன்மிகம் அறிவோமா”)

இன்றைய சிந்தனைக்கு-17:

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திரும்பக் கட்டாமல் இருப்போர் பற்றிய விவரங்களைத் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தரத் தேவையில்லை என்று தகவல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இப்படி மக்கள் நலன் தொடர்பானவற்றுக்கெல்லாம் ஒவ்வொன்றாக விளக்கு அளித்துக்கொண்டே போனால், அப்புறம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் எதற்கு?

நன்றி: “ஒ பக்கங்கள்!” – ஞாநி, ஆனந்த விகடன், நவம்பர் 28, 2007.

இன்றைய சிந்தனைக்கு-16:

கீழே கொட்டிய கடுகைப் பொருக்கி எடுப்பது வெகு சிரமம். அதுபோல் பல திசைகளில் ஓடும் மனதை ஒருமைப் படுத்துவது எளிதன்று. ஆனால், வைராக்கியத்தால் அதை சாதிக்க முடியும். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

இன்றைய சிந்தனைக்கு-3:

நீ சுமக்கின்ற நம்பிக்கை,நாளை நீ கீழே விழும்போது உன்னை சுமக்கும்.

- சீ.மதுவிஜய், 12ம் வகுப்பு

நன்றி: தினமலர், மாணவர் மலர், மதுரை, ஜூலை 14, 2008.

இன்றைய சிந்தனைக்கு

நண்பனையும் நேசி, எதிரியையும் நேசி. நண்பன் உன் வெற்றிக்குத் துணையாய் இருப்பான். எதிரி உன் வெற்றிக்குக் காரணமாய் இருப்பான். – சீ.மதுவிஜய், 12ம் வகுப்பு

(நன்றி: தினமலர், மாணவர் மலர், மதுரை, ஜூலை 14, 2008)

நீங்கள் விரும்பினால்…

நீங்கள் விரும்பினால்…
————————————
உங்கள் விருப்பத்திற்கு வாழ்க்கையை வளைக்கலாம்.
உங்கள் கனவுகளை உண்மையென ஆக்கலாம்.
உங்கள் உறுதியினால் சிரமங்களைக் கடக்கலாம்.
உங்கள் எல்லைகளை நீங்களே உடைக்கலாம்.
தடைகளைச் சீர்செய்து தடமாக மாற்றலாம்.
வீழ்ச்சிகளைத் தடுத்து வெற்றிகளை ஈட்டலாம்.
வீணாகும் நேரத்தைப் பயனுள்ளதாக்கலாம்.
வேண்டாத பழக்கங்களை வினாடிக்குள் நீக்கலாம்.
பகைவர்களை மிக நல்ல நண்பர்களாக மாற்றலாம்.
பழைய தோல்விகளின் பாரங்கள் நீங்கலாம்.
எத்தனை இழந்தாலும் இழந்த பொருள் மீட்கலாம்.
என்றைக்கு இருந்தாலும் எண்ணியதை எட்டலாம்.
கேள்விகளுக்குப் பதில்கள் உங்களிடமே கிடைக்கலாம்.
கேள்விகளுக்குப் பதில் சொல்ல சாதனைகள் படைக்கலாம்.
தேவைகள் பெருகும்போது வரவுகளும் பெருக்கலாம்.
வியர்வை செலவழித்து வெற்றிகள் குவிக்கலாம்.
மௌனத்தைப் பதிலாக்கி விமர்சனங்களை வீழ்த்தலாம்.
குழப்பங்களை இல்லாமல் செயல்திட்டம் வகுக்கலாம்.
கவனத்தைக் குவிப்பதனால் காரியத்தில் வெல்லலாம்.
வெற்றியிலே தேங்காமல் அடுத்த செயல் ஆற்றலாம்.
விவாதங்கள் ஒவ்வொன்றும் தீர்வு நோக்கிச் செல்லலாம்.
முடக்கவரும் எதிர்ப்புகளை முன்கூட்டித் தடுக்கலாம்.
மாற்றங்கள் ஏற்பதனால் ஆதாயம் காணலாம்.
ஏமாற்றம் வந்தாலும் தொட்டதைத் தொடரலாம்.

“ஒரு கப் உற்சாகம்”
‘மரபின் மைந்தன்’ ம.முத்தையா
விஜயா பதிப்பகம், கோவை
விலை: ரூபாய் முப்பது மட்டும்.

தள்ளல் மன்னர்கள்! – எஸ்.சத்தியமூர்த்தி, I.A. & A.S.

தள்ளல் மன்னர்கள்! – எஸ்.சத்தியமூர்த்தி, I.A. & A.S.

திரு மணியனுக்கு (இதயம் பேசுகிறது) இன்றைய வேலையை இன்றே முடிக்க வேண்டும். பெரிய தொழிலதிபர்களுக்கு நாளைய வேலையைக்கூட இன்றே முடிக்க வேண்டும். ஆனால் பல சாமானியருக்கு இன்றைய வேலையை நாளையோ அடுத்த நாளோ செய்தால் போதும். தள்ளல் மன்னர்கள் இவர்கள். இந்தத் தள்ளல் மன்னர்களுக்கு அமெரிக்காவில் ஒரு சங்கம் 1956-ல் ஆரம்பித்திருக்கிறார்கள்….. ஐந்து லட்சம் அங்கத்தினர்கள் சேர ஆசைப் படுகிறார்களாம். ஒரு செய்தி, அதையும் தள்ளிப் போட்டுக்கொண்டு இருக்கிறார்களாம்!


1823-ஆம் ஆண்டில் சின்சினாட்டி பல்கலைக்கழக நூலகத்திலிருந்து எம்.டூட் (M.Dood) என்பவர் திரு.ஜே.கர்ரி என்பவர் எழுதிய ஒரு மருத்துவப் புத்தகத்தை வாங்கிப் போனாராம். அவரும் ஒரு தள்ளல் மன்னர். புத்தகத்தைத் திருப்பித் தரவேயில்லை! அவருடைய கொள்ளுப்பேரன் 1968-ல் அந்தப் புத்தகத்தைத் திருப்பித் தந்தாராம், ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈட்டோடு!

(திரு எஸ்.சத்தியமூர்த்தி அவர்கள் எழுதிய “தள்ளல் மன்னர்கள்’ என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி).

கடைசிப் பக்கம்: சின்னச் சின்ன பூக்கள்“,
திரு எஸ்.சத்தியமூர்த்தி, I.A. & A.S., கலைஞன் பதிப்பகம், சென்னை.விலை ரூ பதினாறு மட்டும். (‘இதயம் பேசுகிறது’ இதழில் கடைசிப் பக்கத்தில் வாரா வாரம் வெளிவந்த சுவையான கட்டுரைகளின் தொகுப்பு).

இன்றைய சிந்தனைக்கு

இன்றைய சிந்தனைக்கு

பொழுது போகவில்லை என்பது வாழ்க்கை இல்லை.பொழுது போதவில்லை என்பதுதான் வாழ்க்கை.

நன்றி: சீ.மதுவிஜய், 12ம் வகுப்பு
தினமலர், மாணவர் மலர், மதுரை, ஜூலை 14, 2008.

மௌனம்

வார்த்தைகளில்லாத புத்தகம் மௌனம்.
ஆனால்வாசிக்க வாசிக்க இதற்குள் வாக்கியங்கள்.
மௌனம் என்பது வெளிச்சம்.
நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம்.
மௌனம் என்பது இருட்டு.
எல்லா கர்வங்களையும் இதற்குள் புதைக்கலாம்.
மௌனம் என்பது மூடி.
இதைத் தயாரித்து விட்டால் எல்லா உணர்ச்சிகளையும்
இதற்குள் பூட்டி வைக்கலாம்.
மௌனம் என்பது போதி மரம்.
இதுவரை உலகம் சொல்லாத
எல்லா உண்மைகளையும் நமக்கு போதிக்கும்.
மௌனம் என்பது தவம்.
இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.
மௌனம் என்பது வரம்.
நம்மிடம் இருந்து நாமே பெறுவது.
இன்பம் துன்பம் இரண்டையும்
மௌனம் கொண்டு சந்தித்தால்
இதயம் எப்போதும் இயல்பாக இருக்கும்.
இதழ்களை இறுக மூடி இறங்குவோம் நமக்குள் நாம்.
மௌனம் என்பது கருவி.
அது குறிக்கோளாகாது.
மௌனம் என்பது வாள்.
பேச்சு உறை.
மௌனம் என்பது சொர்க்கம்.
பேச்சு நரகம்.
மௌனம் ஒற்றுமையை ஊட்டும்.
பேச்சு வேறுபாடு வளர்க்கும்.

நன்றி : இயற்கை மருத்துவம், அக்டோபர் 2000

இன்றைய சிந்தனைக்கு – நவம்பர் 30, 2007

இன்றைய சிந்தனைக்கு – நவம்பர் 29, 2007

இன்றைய சிந்தனைக்கு – அக்டோபர் 26, 2007

மூன்று உண்மைகள்

இன்றைய சிந்தனைக்கு-5: "மனிதன் மனிதனாக 18 விஷயங்கள்"

இன்றைய சிந்தனைக்கு-4: "இந்திய வளர்ச்சிக்கு சச்சின் டெண்டுல்கர் சொல்லும் வழி"

இன்றைய சிந்தனைக்கு-3

இன்றைய சிந்தனைக்கு-2: "புத்தகம் போல் திறந்து கிடக்கிறேன் – வலம்புரி ஜான்"

வலம்புரி ஜான்

இன்றைய சிந்தனைக்கு-1: ஆகஸ்ட் 6, 2007

Follow

Get every new post delivered to your Inbox.