இயற்கை உணவுக் குறிப்பு-3: "ராகிப் புட்டு"

கேழ்வரகை எட்டு மணி நேரம் ஊறவைத்து, இடித்துச் சலித்த மாவில், தேங்காய்த்துருவல், வெல்லம் சேர்த்துக் குழாயிலோ, இட்லிப்பானையிலோ வேகவைத்துத் தயாரிக்கலாம். இது இனிப்புப் புட்டு.

ராகி மாவுடன் தேங்காய்த்துருவல், மிளகுத்தூள் சேர்த்துத் தயாரித்தால் அது காரப்புட்டு ஆகும்.

நன்றி: “இயற்கை நாதம்”, அக்டோபர் 2008, ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்க வெளியீடு.

இயற்கை உணவுக் குறிப்பு–2: "தக்காளி தயிர் பச்சடி"

தக்காளி மிக மலிவாகக் கிடைக்கும் காலத்திற்கேற்ற எளிய இயற்கை உணவு இது. இதைத் தயாரிக்கத் தேவையான பொருட்கள் : நான்கு தக்காளி, மிளகு சில, அரை கப் தேங்காய்த் துருவல், இரண்டு கப் தயிர், கொத்தமல்லி இல்லை, உப்பு.

தக்காளியை நன்றாக அரைக்கவும். அத்துடன் போடி செய்த மிளகு, தேங்காய்த் துருவல், கொத்தமல்லி இல்லை இவை அனைத்தையும் நைசாக அரைக்கவும். இந்தக் கலவையை அப்படியே தயிரில் கலக்கவும். தக்காளிப் பச்சடி தயார்.

இயற்கை உணவுக் குறிப்பு-1: "இயற்கை இட்லி"

அவலை ரவா போல் உடைத்து, இளநீர் அல்லது கோதுமைப் புல் சாறு கலந்து, கெட்டியாகப் பிசைந்து, இட்லி தட்டில் தட்டி வைக்க வேண்டும். இருபது நிமிடத்தில் இட்லி வடிவத்தில் இருக்கும்; வேக வைக்கவேண்டியதில்லை.
நன்றி: இயற்கை நாதம், மாத இதழ், செப்டம்பர் 2008. (ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்க வெளியீடு).

Follow

Get every new post delivered to your Inbox.