எது கவிதை? – புதுமைப்பித்தன்

கவிதையைக் கலையின் அரசி என்பார்கள். கல்லாத கலை என்பார்கள். கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்துவிட்டால் கவியாகுமா? கவிதையின் இலட்சணங்கள் என்ன? கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு. ஆனால் அவைகளின் கூட்டுறவு மட்டும் கவிதையை உண்டாக்கிவிடாது. கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவசக்தி. அது கவிஞனது உள் மனத்தின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொறுத்துத்தான் இருக்கிறது. – புதுமைப் பித்தன்

கேள்வியும் பதிலும்-8: "எது கவிதை? – வலம்புரி ஜான்"

எது கவிதை? – வலம்புரி ஜான்

கனிக்குள்ளே
கண்ணுறங்கும் விதை!
விதைக்குள்ளே
விழித்திருக்கும் மரம்!
கூட்டுக்குள்
குறுகுறுக்கும் உயிர்ப் பறவை!
உயிர்ப் பறவை உள்ளுக்குள்
ஒளிந்திருக்கும் ஓசை!

வலம்புரி ஜானின் ‘நினைத்தால் வருவதல்ல கவிதையிலிருந்து”

ஒரு நதி குளிக்கப் போகிறது’
வலம்புரி ஜான்
அபிராமி பப்ளிகேஷன்ஸ்
307, லிங்கி செட்டி தெரு
சென்னை-600001

கேள்வியும் பதிலும்-7: "எது கவிதை? – கண்ணதாசன்"

எது கவிதை? – கண்ணதாசன்

“கவிதை என்பது உணர்ச்சியின் பிரவாகம்”. கட்டவிழ்ந்து துள்ளிவரும் சிந்தனைகள், சொற்கோலமாக விழுவதே கவிதை. உரைநடைக்கும், கவிதைக்கும் உள்ள வேறுபாடு, உரைநடை ஆற்று நடையாகவும், கவிதை அருவி நடையாகவும் வருவதுதான். கவிதையின் தனிச் சிறப்பு, தாளமும், சந்தமும் நிறைந்திருப்பதுதான்.

கவிஞர் வைரமுத்துவின் “வைகறை மேகங்களுக்கு” கண்ணதாசனின் அணிந்துரையிலிருந்து

Follow

Get every new post delivered to your Inbox.