என்ன நடக்கிறது?-3: 74 அரசு பள்ளிகளில் எட்டு மாதமாக மின்சாரம் துண்டிப்பு"

18.11.08 தினகரன் நாளிதழில் வெளியான செய்தியிலிருந்து ஒரு பகுதி:
சென்னிமலை ஒன்றியத்தில் 74 அரசு பள்ளிகளில் கடந்த எட்டு மாதமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. கணினி, டிவிடி மூலம் கல்வி கற்கமுடியாமல் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நன்றி: “தினகரன்” நாளிதழ்.

என்ன நடக்கிறது?-2: "கறுப்புப்பணம் கொட்டிக் கிடக்குது ஸ்விஸ் வங்கியில்!"

வேற்று நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் கருப்புப்பணம் சுமார் 64 லட்சம் கோடி ரூபாய் என்ற அதிர்ச்சித் தகவலை, நவம்பர் 5, 2008 குமுதம் இதழில் வெளியாகியுள்ள புஷ்கின்ராஜ்குமாரின் கட்டுரை தெரிவிக்கிறது. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், ஸ்டாக் புரோக்கர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், சினிமா நடிகர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கிரிமினல்களுக்குச் சொந்தமானது இந்தப் பணம் என்று கூறப்படுகிறது.

சர்வதேச பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், விற்பனை, சர்வதேச அளவில் விபச்சாரம், புளு பிலிம் மற்றும் சூதாட்டத்திற்கு இந்தப் பணம் பயன்படுத்தப் படுவதாகவும் கூறப்படுகிறது.

லீச்டென்ஸ்டீன் என்கிற சிறிய நாட்டின் எல்.டி.ஜி. வங்கியில் கறுப்புப்பணம் வைத்திருந்த வெளிநாட்டவர்கள் பற்றிய தகவலை ஜெர்மானிய நாட்டின் புலனாய்வுத்துறை சேகரித்துள்ளது. அதனிடமிருந்து பல நாடுகள் தங்கள் நாட்டவர்களின் கறுப்புப்பண விபரங்களைக் கேட்டறிந்து, அந்தக் கறுப்புப்பணத்தை தங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த வங்கியிலும் இந்தியர்கள் பலர் கறுப்புப்பணத்தை வைத்துள்ளனர். இந்திய அரசு கேட்டுக் கொண்டால் பெயர் உட்பட அனைத்துத் தகவல்களையும் தருவதாக ஜெர்மானிய புலனாய்வுத்துறை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. ஆனாலும் இந்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.

சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலருமான திரு மோகனகிருஷ்ணன், டெல்லி உச்சநீதி மன்றத்தில் இதுகுறித்து பொது நல வழக்குத் தொடர ஆயத்தமாகி வருகிறார். நிச்சயம் அந்தக் கறுப்புப்பணப் பட்டியலை வெளியிட வைப்பேன் என்கிறார் அவர்.

நன்றி: திரு புஷ்கின்ராஜ்குமார், திரு மோகனகிருஷ்ணன் & குமுதம்.

என்ன நடக்கிறது?-1:

அரக்கோணத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் பேசியதிலிருந்து:
“மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் மக்களுக்கு திட்டங்கள் சென்றடையும் என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார். அரக்கோணம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்று எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி குறிப்பிட்டார். ஆனால், மத்திய சுகாதாரத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

* கிராமப்புற சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய சுகாதாரத்துறை 1850 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியைக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.
* சென்னை எழும்பூர் மருத்துவமனையை மேம்படுத்த நூறு கோடி ரூபாய் ஒதுக்கி, இரு ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணி நடக்கவில்லை.
* இரத்த அணுக்கள் அமைக்க இருநூற்று ஐம்பது கோடி ரூபாய் ஒதுக்கியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* முதியோர் சுகாதார வசதிக்காக ஐம்பது கோடி ஒதுக்கினோம். இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவில்லை.
* தேசீய சித்த ஆராய்ச்சி மையம் அமைக்க சென்னையில் ஐந்து ஏக்கர் இடம் கேட்டோம். ஆனால் தமிழக அரசு இடத்தை ஒதுக்கவில்லை.

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்”.
நன்றி: தினமலர், மதுரை, அக்டோபர் 13, 2008.

Follow

Get every new post delivered to your Inbox.