கடிதம்-2: "பேயாட்டம்"

சட்டம் படிக்கும் மாணவர்கள் கைகளில் சட்ட புத்தகத்திற்குப் பதிலாக கத்திகளும், வீச்சரிவாளும், இரும்பு ராடுகளும், குண்டாந்தடிகளுமாக சென்னை அம்பேத்கார் அரசு சட்டக் கல்லூரியில் வலம் வந்து அராஜகம் செய்திருக்கின்றனர்.

மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் ஜாதி, நக்சல், அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், கல்வெட்டுக்கள், சுவரொட்டிகள் போன்றவற்றை அனைத்து சட்ட, பிற கல்லூரிகளின் முன் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்; தற்போது இருப்பதையும் அகற்ற வேண்டும்.

மாணவர் மன்றம் என்ற பெயரில் நடைபெறும் கூட்டங்களில் ஜாதிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பதற்கும் தடை விதித்து, அரசு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும்.
- எஸ்.குமார், கோவை.
“இது உங்கள் இடம்” (ஆசிரியர்க்குக் கடிதங்கள் பகுதி), தினமலர், மதுரை, நவம்பர் 16, 2008.
நன்றி: திரு.எஸ்.குமார் & தினமலர்.

கடிதம்-1

Follow

Get every new post delivered to your Inbox.