நலக்குறிப்புகள்-23: "கொத்தமல்லி"

1. கெட்ட கொலச்ற்றாளைக் குறைக்க கொத்தமல்லி உதவும்.
2. நல்ல ஜீரண சக்தியைத் தரும்.
3. தேவையில்லாத ஏப்பத்தைக் கட்டுப்படுத்தும்.
4. கொத்தமல்லி விதையைத் தட்டி, தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து கஷாயம் வைத்துக் குடித்துவர பித்தம் (உஷ்ணம்) தணியும்.
5. அறை டம்ளர் பாலில் இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி விதையும், அறை டம்ளர்
தண்ணீரும் கலந்து கொதிக்க வைத்துப் பருகிவர இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
ஆதாரம்: தினமணி கதிர், 16.11.08

நன்றி: தினமணி கதிர்.

நலக்குறிப்புகள்-22: "ஊட்டச்சத்துக்கள் சிதையாமல் சமைப்பது எப்படி?"

1. காய், கனிகளைக் கழுவிய பிறகே வெட்டுங்கள்.
2. காய்களை மூடிய பாத்திரத்தில் வேக வைக்கவும்.
3. உணவை அதிகம் வேக வைப்பதைத் தவிர்க்கவும்.
4. சோடா உப்பை உணவில் சேர்த்தால் வைட்டமின்களைப் பாதிக்கும். எனவே சோடா உப்பை சமையலில் சேர்ப்பதைத் தவிர்க்கவும்.
5. குறைந்த அளவு நீரில் ஓரிரு முறை மட்டும் அரிசியைக் களையவும்.
6. சோறு ஆக்கும் பொது அதிக நீரைச் சேர்த்து வடிப்பதைத் தவிர்த்து, சரியான அளவு நீரைச் சேர்த்து ஆக்கவும்.
7. அரிசியை அதிகம் பாலிஷ் செய்யாமல் பயன்படுத்தவும்.
8. கோதுமைத் தவிட்டில் அதிக நார்ச்சத்து உள்ளது. எனவே கோதுமை மாவை சலித்து, தவிடு நீக்காமல் அப்படியே பயன்படுத்துக.
9. நோய் தாக்கிய தானியங்களைப் பயன்படுத்தாதீர்.
10. உருளைக்கிழங்கில் சில இடங்களில் படர்ந்து காணப்படும் பச்சை நச்சுத்தன்மை வாய்ந்தது. எனவே பச்சை நிறம் கலந்த உருளைக்கிழங்கைப் பயன்படுத்தாதீர்.
11. பொரித்த எண்ணையை மீதம் வைத்து மறுபடியும் பயன்படுத்தாதீர்கள்.

“அறிக அறிவியல்” நவம்பர் மாத இதழில் “ஆரோக்கிய உணவு” என்ற தலைப்பில் டாக்டர் சே.குமரப்பன் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.
நன்றி: டாக்டர் சே.குமரப்பன் அவர்கள் & “அறிக அறிவியல்”.

கருத்துக்கள்-11: "புகைக்குடி" – யோகி சுத்தானந்த பாரதியார்

சந்தைக்கூட்டம், வண்டிக்கூட்டம், காட்சிக்கூட்டங்களில் எல்லாம் கரிக்காற்று மிகுதி. கரிக்காற்றும், வியர்வை நாற்றமும் ஆளைக் கெடுக்கும். சுருட்டுப் புகையும் கூடிவிட்டால் வேறு வினை வேண்டா! இச்சுருட்டை எந்த சைத்தான் கொண்டுவந்தான்? நெஞ்சைக்கெடுத்து, வாயைச் சாக்கடை நாற்றமாக்கி, பல்லைக் கெடுத்து, பசியைக் கெடுத்து, உருசியைக் கெடுத்து, நச்சுப் புகையால் சுற்றிலும் உள்ள பலருக்குத் தீங்கு விளைவிக்கும் இப்புகைக்குடிகளை ஏனோ பகுத்தறிவுள்ள மனிதன் பழகினான்! பார்த்தால் ஒரு பைசா பீடி; புகைத்தால் பல பேருக்குக் கேடு! ஒரு பெரிய அறையின் காற்றைக் கெடுக்க ஒரு சிறிய சுருட்டுப் போதும்! ஒருவர் பிரம்மப்பத்திர புகைவிட்டால் 2000 பேர் மூச்சைக் கெடுப்பதாகும். மூச்சைப் பிடித்து ஆளைக் கொள்கிறதே! இந்த சுருட்டுப் பாவியை ஒழிக்கலாகாதா? அட, நாகரிகமே! பொறிப்புகை, கரிப்புகை, வண்டிப்புகை, சுருட்டுப்புகை, மண்ணெண்னைப்புகை, சாராய வாடை, கும்பல் நாற்றம்! காடு, மலை, வானம், கடல் வெளிகளுக்குப் போனால்தான் நல்ல காற்று!
- யோகி சுத்தானந்த பாரதியாரின் “உடல் உறுதி” என்ற நூலிலிருந்து.
நன்றி: இயற்கை நாதம், அக்டோபர் 2008, (ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்க வெளியீடு)

நலக்குறிப்புகள்-20: "வெள்ளைப்பூண்டு"

வெள்ளைப்பூண்டு மாரடைப்பைத் தடுக்க வல்லது. பூண்டு இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. புற்றுநோய்க் கட்டிகள் முதல் தேவை இல்லாத கட்டிகள் வளர்வதையும் கட்டுப்படுத்த வல்லது பூண்டு.

நலக்குறிப்புகள்-19: "திருநீற்றுப்பச்சிலை"

திருநீற்றுப்பச்சிலையை அரைத்து இரவில் கட்டியில் போட்டு வர கட்டிகள் உடையும்.

இலையை நுகர்ந்து தலையணை அடியில் வைத்துப் படுத்தால் தலைவலி போய், நன்கு தூக்கம் வரும்.

இலைச்சாற்றுடன் சம அளவு தேன் கலந்து பருகிவர, மார்புச்சளி, இருமல், மேல் சுவாசம், வயிற்று வாய்வுப் பிரச்னைகள் தீரும்.

இலையை வாட்டிப் பிழிந்து காதில் விட, காது நோய், காது மந்தம் தீரும்.

நன்றி: ‘இயற்கை மருத்துவம்’, ஆகஸ்ட் 2007 ( மதுரை தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்க வெளியீடு)

நலக்குறிப்புகள்-18: "வில்வ இலைக்குடிநீர்"

ஒரு கைப்பிடி வில்வ இலையை ஒரு டம்ளர் நீரில் (௨00 மிலி) மாலையில் ஊற வைத்து பத்து மணி நேஅரம் ஊறியபின் அந்த நீரை (இல்லை வடிநீர்) வெறும் வயிற்றில் அருந்தி வரவேண்டும். (அருந்திய பின் இரண்டு மணி நேரம் வரை எதையும் சாப்பிடாமல் இருந்தால் நீர் நன்றாக வேலை செய்ய ஒரு வாய்ப்பு.) சுவைக்காகவோ, மணத்திாகவோ எதையும் சேர்க்கக் கூடாது.
நீங்கும் பிரச்னைகள்: மலச்சிக்கல் நீங்கும். அஜீரணம் போகும். வாயுத்தொல்லைகள் நீங்கும். அல்சர் பூரண குணம் கிடைக்கும். தொடர்ந்து பருகிவர, பெண்களுக்கு வெள்ளைபடுதல் பிரச்சனை தீரும். முடி உதிர்வதைத் தடுக்கும். கூந்தல் வளர்ச்சியைக் கொடுக்கும்.
நன்றி: எஸ்.கஜேந்திரன், செல் 9442669325 & ‘இயற்கை மருத்துவம்’, அக்டோபர் 2008, (தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்க வெளியீடு).

நலக்குறிப்புகள்-17: "அருகம்புல்லின் சிறப்புகள்" – ச.வெ.சுப்பிரமணியன்

இயற்கை வாழ்வியல் அல்லது உணவு மருத்துவத்தில் அருகம்புல்சாறு முதலிடம் பெறுகிறது. இதன் சிறப்பும் பண்பும் பலவாகும். அருகம்புல்லில் பச்சையம் நிறைந்துள்ளது. காரத்தன்மை உடையது. உயிர்ச்சத்துக்களும், தாது உப்புக்களும் இருக்கின்றன. உடல்தளர்ச்சியை நீக்கி, கட்டுமாறா உடலுறுதியைத் தரவல்லது. உடலிலுள்ள நச்சுத்தன்மைகளை நீக்குகிறது.

உடற்பிணிகள் அனைத்துக்கும் முதற் காரணமான குருதியின் அமிலத்தன்மையை சீர்செய்து, குடற்புண்களை குணப்படுத்துகிறது. ஆக்கச்சிதைவு மாற்றத்தை சீர்செய்து, நரம்புத் தளர்ச்சியிலிருந்து பாதுகாக்கிறது. இரத்தத்தைக் கூடுதலாக்கி, இரத்தச் சோகையை நீக்குகிறது. இதயம், நுரையீரல் போன்றவற்றின் சீரான இயக்கத்திற்குத் துணைபுரிகிறது. கல்லீரலில் இறுக்கம் உண்டாகி கற்கள் படிவதைத் தடுக்கிறது. இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது.

சிறுநீரகத்தின் குறைபாட்டினை நீக்கி அது சீராகப் பணிபுரிய உதவுகிறது. பல் ஈறுகளில் இரத்தம் வடிதலை நிறுத்தி, பற்களை உறுதிப் படுத்துகிறது. பற்களை வெண்மையாக்கி, வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. பிள்ளைப்பேறு காலத்தில் தாய்மார்களுக்கு பால்சுரப்பை உண்டுபண்ணுகிறது. நச்சுப் பொருட்களால் உண்டாகும் புற்றுநோயைத் தடுக்கிறது. இதில் இன்சுலின் நிறைந்துள்ளதால் நீரழிவுக்கு நன்மருந்தாகும். நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கத்தை இது சீர்படுத்துவத்தின் மூலம், ஆஸ்துமாவிலிருந்து நலம்பெற உதவுகிறது.

உடலின் வெக்கையை நீக்க உதவும். உணவுப் பாதையில் நடைபெறும் தொடர் அலை அசைவை சீர்செய்து, மலச்சிக்கலை நீக்கி, உடல்நல உயர்வினை நல்குகிறது. தோல் தொடர்பான பிணிகளுக்கு சிறந்த பயனளிக்கிறது.

அருகம்புல் சாற்றினை காலை வெறும் வயிற்றில் உணவாகக் கொள்ளலாம். உணவைக்குடி, நீரை உன் என்ற சொற்றொடரை மனதில் கொண்டு, நன்கு சுவைத்து, சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலக்கும்படி வாயில் ஊறவைத்து உண்ணவேண்டும். குடித்த இரண்டு மணி நேரத்திற்கு நீரின்றி பிற உணவுகளைக் கொள்ளலாகாது.

நன்றி: திரு ச.வெ.சுப்பிரமணியன், அறிக அறிவியல், ஜனவரி 1995.

நலக்குறிப்புகள்-16: "நலமுடன் வாழ…"

ஒருவர் ஆரோக்கிய வாழ்வு வாழ இயற்கையோடு இயைந்து வாழவேண்டும். உணவின் அளவு பற்றி ஒவ்வொருவருக்கும் அக்கறை வேண்டும். அளவாக உண்ணுதலிலேயே ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது. சோறு மிகக் குறைவாக இருந்தால் போதும். காய்கனிகளைத்தான் நிறைய உண்ணவேண்டும்.
நண்றாக மென்று உண்ணவேண்டும். எவ்வளவு சுவையானதாக இருப்பினும், ஒருவர் தனது தேவைதான் என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டும். உணவுக்குப் பின்னால் முக்கியத்துவம் பெறுவது உடற்பயிற்சி.
பச்சைக்காய்கறிகள், பழங்கள் மிகுதியாய் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள். எந்த உணவானாலும் அளவாக உண்ணப் பழகுங்கள். உணவு உண்ணப் போதுமான நேரம் கொடுங்கள். நீங்கள் எப்போதும் இளமையாகவும், நலமுடனும் வாழ முடியும்.
- டாக்டர் சத்தியவான்
நன்றி: டாக்டர் சத்தியவான் & ‘இயற்கை மருத்துவம்’, மாத இதழ், தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்க வெளியீடு.

நலக்குறிப்பு-15: "அறிவுக் கூர்மைக்கு பிராணாயாமம்!"

மனித உடலில் ஐந்து வகையான வாயுக்கள் உயிர் உள்ளவரை செயலாற்றுகின்றன. அவற்றுக்கு பிராணம்-உதானம்-வியானம்-ஸமானம்-அபானம் என்று பெயர். பிராணவாயு தலையைத் தங்குமிடமாகக் கொண்டது; அது தொண்டையிலும், மார்பிலும் உலவுகின்றது. அறிவு, புலன்கள், இதயம், மனம், நாடிகள் இவற்றை நிலைநிறுத்தச் செய்கிறது. துப்புதல், தும்மல், ஏப்பம், உள்ளிழுக்கும் மூச்சு, வெளிவிடும் மூச்சு, உணவை உட்செலுத்துதல் ஆகியவை இதன் செயல்களாகும்.

உதான வாயு மார்பில் இருந்துகொண்டு, தொண்டை, மூக்கு முதல் தொப்புள் வரை உலவும். பேசுதல், செயலில் முயற்சி, புஷ்டி, வலிவு, நிறம், உடல் உட்புறக் குழாய்களைத் தெளிவாக வைத்திருத்தல், அறிவு, தைரியம், நினைவாற்றல், மனதிற்கு உணர்வுகளைத் தெரிவித்தல் ஆகியவை இதன் செயல்களாகும்.

…சரியான முறையில் பிராணாயாமம் செய்பவர்களுக்குப் பிராணவாயுவின் செயல்திறன் மேம்பட்டு, அவர்களின் அறிவுக்கூர்மை, மனதை ஒருமுகப் படுத்தும் ஆற்றல் மிகுந்திருப்பதைப் பார்க்க முடிகின்றது.

தகவல்: பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன் அவர்கள் தினமணிக் கதிரில் (23.9.2007) எழுதிய “அறிவுக்கூர்மைக்குப் பிராணாயாமம்!” என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.
நன்றி: பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன் அவர்கள் & தினமணிக் கதிர்.

நலக் குறிப்புகள்-14:

உணவு உட்கொண்டவுடன் உட்காரவோ, படுக்கவோ, ஓடுவதோ கூடாது. சிறிது நேரம் உலாவ வேண்டும். உணவு உட்கொண்ட உடன் ஓடுபவன் மரணத்தை நோக்கி ஓடுகிறான் என்கிறது ஆயுர் வேதம்.

நன்றி: ‘வேதம் சொல்லும் ஆரோக்கியம்’
சேஷாத்ரி நாத ஸ்வாமிகள்
‘தன்வந்திரி’
டிசம்பர் 1992

நலக்குறிப்புகள்-13: "கறிவேப்பிலைப் பாயாசம்"

கறிவேப்பிலையைத் தண்ணீர்விட்டு மிக்சியில் இட்டு மெதுவான வேகத்தில் அரைத்து, தேங்காய்ப்பாலும், தேனும் சேர்த்தால் அதுவே கறிவேப்பிலை பாயாசம். இதை அருந்துவதால் கண்கள் பிரகாசமடையும்; இளநரை போகும்.
நன்றி: இயற்கைநாதம், செப்டம்பர் 2008.
(ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்க வெளியீடு)

நலக்குறிப்புகள்-12: "புதினா டீ"

தேவையான அளவு கொத்துமல்லி விதை, மல்லித் தழை, இஞ்சி, புதினா இலைகள் இவற்றை நீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி, வெள்ளம் சேர்த்துத் தயாரிப்பது புதினா காப்பி ஆகும். இந்தக் காப்பி செரிமானத்தை மேம்படுத்தும்.
நன்றி: “இயற்கைநாதம்”, மாத இதழ், செப்டம்பர் 2008.

நலக்குறிப்புகள்-11: "மூட்டுவலிக்கு…"

நாற்பது வயதைக் கடந்தாலேயே மூட்டுவலி படுத்தத் தொடங்கிவிடும். எளிய கை வைத்தியம் இதோ! பாகற்காய் விதைகளைக் காயவைத்து, மையாக அரைத்து, முழங்காலில் பற்றுப்போட்டல் வலி வெகுவாகக் குறையும்.

நன்றி: பி.சந்திரிகா, வேலூர், குமுதம் சிநேகிதி, அக்டோபர் 2002.

நலக்குறிப்புகள்-10:

எதிருயிரி மருந்துகளை (ஆன்டிபயாடிக்ஸ்) உட்கொள்ளும்போது, பக்கவிளைவாக வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்?
எதிருயிரி மருந்துகளை உட்கொள்ளும்போது வயிற்றுப்போக்கு ஏற்படுவது பொதுப்படையான பக்கவிளைவுதான். நோயை உண்டாக்கும் கிருமிகளுடன், குடலில் உள்ள நன்மை தரும் கிருமிகளும் வெளியேறுவதால் இந்த உபாதை ஏற்படலாம். இந்த கிருமிகள் மீண்டும் உற்பத்தி ஆக சில காலம் பிடிப்பதால், மருந்து சாப்பிடுவதை நிறுத்திய பிறகும் வயிற்றுப்போக்கு தொடர்ந்து ஏற்பட வாய்ப்பு உண்டு.

நன்றி: தினமலர், மதுரை, செப்டம்பர் 9, 2008.

நலக்குறிப்புகள்-9: "வாதம்"

வாதம் என்பது சரியான உடல் உழைப்பு இல்லாமையாகும். உடல் உழைப்பே உடல் மன நோய்களைத் தீர்க்க வல்லது. மலம் சரிவரக் கழியாமையால், அதிலிருந்து ஏற்படும் அபான வாயு உள்ளே தங்கி, வாதம் ஏற்படும். வாதம் அதிகமானால் கை, கால் செயலிழப்பு ஏற்பட்டு, நடக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். ஆக வாத பித்த கபங்களைக் கட்டுப்பாட்டுடன் அளவாக வைத்துக் கொள்ளவேண்டும்.

நன்றி: “இயற்கை மருத்துவம்”, தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்கம், காந்தி நினைவு நிதி, மதுரை-625020.

சுக வாழ்க்கைக்கு விதிகள் – பிக்ஷூ சுவாமிகள்

1. கடவுளைத் துதிப்போம். அகம்பாவத்தை ஒழிப்போம். மனக் கவலையை ஒழிப்போம். எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுவோம். ஆசாபாசங்களை விடுவோம்.
௨. சுத்தமான காற்றில் வாசிப்போம்.
3. யோகாசனம், பிராணயாமம் முதலிய பயிற்ச்சிகள் செய்வோம்.
4. சுத்தமான தண்ணீரையே பருகுவோம். காப்பி, டீ, சோடா, மது விலக்குவோம்.
5. பசித்தே உண்போம். மாமிசம் விலக்குவோம். சைவ ஆகாரத்தையே அளவாக உண்போம். சமைக்காத பச்சைக் காய்கறி உண்பது நலம். உப்பு, காரம், புளி குறைவாகப் பயன்படுத்துவோம்.
6. அபினி, கஞ்சா, புகையிலை நீக்குவோம்.
7. சுத்தமான உடையையே குறைவாக உடுத்துவோம்.
8. சுத்தமான தண்ணீரிலேயே குளிப்போம்.
9. வாரத்தில் ஒருநாள் உபவாசம் இருப்போம். 1
10. நோய் வந்தால் நோன்பு இருப்போம். கூடிய வரையில் மருந்துகளைத் தவிர்ப்போம்.
11. பிரம்மச்சரியம் கடைப் பிடிப்போம்.
12. உலக ஆடம்பரத்திர்காகச் செலவழித்து அடிமையாகாதிருப்போம்.
13. நம்மால் இயன்றவரை உதவி செய்வோம். யாருக்கும் தீங்கு இழைக்காமல் இருப்போம்.
14. ஒருபொழுதும் சூதாடாமல் இருப்போம்.
15. மெய்ப்பொருள் ஆராய்ச்சி செய்து தன்னை அறிந்து பிரம்மானந்த மயமாக வாழ்வோம்.

நன்றி: “இயற்கை மருத்துவம், ஏன்?” – பிக்ஷூ சுவாமிகள்,

தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்க வெளியீடு (மதுரை), விலை: ரூபாய் பத்து மட்டும்.

நலக்குறிப்புகள்-7:

ஒரு பொருளுக்கு மூன்று பக்கங்கள் (3-D) இருப்பதைப் போல, ஆரோக்கியத்திற்கும் மூன்று பக்கங்கள். உடல், மனம், சமூகம் என்பவை அவை. உடற் குறைவு மனதைப் பாதிக்கும். மனநிலை உடலைப் பாதிக்கும். சமூகச்சூழல் இரண்டையும் பாதிக்கும். ஆகவே இம்மூன்றும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு உடையவை. ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் இதை மனதிற் கொள்ளுதல் அவசியம். – அமரர் மகரிஷி க.அருணாசலம்

நலக்குறிப்புகள்-6:

வேப்ப எண்ணெய், மஞ்சள் சேர்த்துக் குழைத்து பித்த வெடிப்பின் மீது தடவ, விரைவில் குணமாகும். – டி.கௌரி, கம்பம்

(நன்றி: மங்கையர் மலர், ஜூன் 2008)

நலக்குறிப்புகள்-5: நோயின்றி வாழ ஐந்து வழிகள்!

நோயின்றி வாழ ஐந்து வழிகள்!

1. காலை மாலை கடவுள் வழிபாடு
2. சந்தி நேரங்களில் உடற்பயிற்சி
3. ஒரு நாளைக்கு இரு வேளை உணவு.
4. நாள் ஒன்றுக்கு எட்டு டம்ளர் தண்ணீர்.
5. மாதம் ஒரு நாள் உபவாசம்.

நன்றி: ஆடுதுறை இயற்கை நலவாழ்வு சங்கம்

நலக்குறிப்புகள்-4: "தேங்காய்"

நலக்குறிப்பு – “தேங்காய்”
—————————————-
தேங்காய் கொலெஸ்த்ராலை (cholestrol) அதிகரிக்கும் என்று கூறுவது தவறு. சமைத்த தேங்காய்தான் கொலெஸ்த்ராலை (cholestrol) அதிகரிக்கும். நீருள்ள தேங்காய் சிறந்த உணவு. அது எளிதில் சீரணமாகும். கழிவுப் பொருட்களை நீக்கும். தேங்காயை ஒரு வேலையாவது உணவாகக் கொள்ள வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பால் என்பது போல வளர்ந்த மனிதனுக்கு ஏதாவது இருக்கிறதா என்றால் அது தேங்காயும், பழங்களும்தான். இவற்றை மட்டுமே உண்டு வாழ்ந்து காட்டியவர் தியாகி ம.கி.பாண்டுரங்கனார்.

நன்றி: ‘இயற்கை நாதம்’, மாத இதழ், ஜூலை 2008

நலக்குறிப்புகள்-3: "வாழை இலையின் மருத்துவ குணங்கள்"

1.வாழை இலையில் சூடான அன்னத்தை நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வந்தால் கண், இதயம், மூளை, குடல் முதலிய உறுப்புகள் சிறப்பாக இயங்கும்.
2.வாழை இலைத் துளிரை அரைத்துக் குடித்து வந்தால் ஸோரியாஸிஸ் முதலிய 18 வகை தோல் நோய்கள் குணமாகும்.
3. புற்றுநோய், பிளவை, தொழுநோய் முதலிய நோய்கள் ஏற்படுத்தும் புண்களின் மேல் வாழை இலையில் விளக்கெண்ணெய் தடவி, கட்டி வர அந்தப் புண்கள் ஆறும்.
4. இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்களில் வாழையிலையை போர்த்திக் கொண்டு சூரிய ஒளிக் குளியல்கள் செய்வார்கள். இதனால் உடலின் கழிவுகள் வியர்வையாக வெளியேறும். ஸோரியாஸிஸ், அதிக உடல் எடை முதலிய நோய்கள் நீங்கும்.

நன்றி: “இயற்கை நாதம்”, (இயற்கை நல மாத இதழ்), ஜூன் 2008

ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம், தியாகராஜபுரம்-609802, தமிழ்நாடு

நலக்குறிப்புகள்-2: அகத்திக்கீரை

நலக்குறிப்புகள்-1: அகத்திக்கீரை

புகை பிடிக்கும் பழக்கத்தை விட முடியாதவர்களுக்கு, அகத்திக் கீரை அருமருந்து. புகை பிடிப்பதால் மூச்சுக்குழாயிலும், இருதயத்திலும் படியும் விஷத்தன்மையை அகத்திக்கீரை முறியடிக்கும்.

தகவல்: வள்ளி ராமகிருஷ்ணன், திருவனந்தபுரம்

நன்றி: மங்கையர் மலர், ஜூன் 2008

நலக்குறிப்புகள்-1 : அஜினோமோட்டோ

Follow

Get every new post delivered to your Inbox.