பிருந்தாவின் கவிதைகள்-2: "சுனாமி"

அன்று -
அன்பிற்கு மனிதன்
பொறுமைக்கு நிலம்
பெருமைக்குக் கடல்.
இன்று -
ஒரு பக்கம் கொலை, கொள்ளை
மனித நேயம் என்பதே இல்லை
எங்கும் பொய், புரட்டு;
மண்ணுலகெங்கும் இருட்டு.
மனிதனின் ஆசையின் எல்லை
அதற்கோ முடிவில்லை.
நிலத்தைச் சுரண்டினான்;
கடலைச் சூறையாடினான்;
நிலம் பூகம்பமாய் வெடித்தது;
கடலும் தன் பங்கிற்கு அள்ளியது;
எதற்கும் கொடுக்கும் ‘விலை’,
இவற்றிடம் செல்லவில்லை.

(2004 டிசம்பரில் இந்தியாவைத் தாக்கிய சுனாமிக்குப்பின் எழுதியது.)

பிருந்தாவின் கவிதைகள்-1 : அன்புள்ள அம்மா!

அன்புள்ள அம்மா!
எங்கு திரும்பினாலும்
வீட்டின் நினைவலைகள்
நினைக்க நினைக்க கவலைகள்.
என் கண்ணில் நீர்த்தேக்கம்,
மனத்தில் தனிமையின் தாக்கம்,
எல்லாம் நீயில்லாத ஏக்கம்.
விடுதியும் வீடும் ஒன்றாகுமா?
அங்கோ,
காலையில் எழுப்பவும்,
அறுசுவை உணவளிக்கவும்
அன்பான நீ!
இங்கோ,
கரகரப்பான அழைப்பு மணி!

Follow

Get every new post delivered to your Inbox.