Poem of the day-59: "Brahman" (or Atman)

If the red slayer think he slays,
Or if the slain think he is slain,
They know not well the subtle ways
I keep, and pass, and turn again.
Far or forgot to me is near,
Shadow and sunlight are the same,
The vanished gods to me appear,
And one to me are shame and fame.
They reckon ill who leave me out;
When me they fly, I am the wings;
I am the doubter and the doubt,
And I the hymn the Brahmin sings.
The strong gods pine for my abode,
And pine in vain the sacred Seven;
But thou, meek lover of the good!
Find me, and turn thy back on heaven.

Courtesy: The Atlantic Monthly, Nov. 1857

Letters-76: "Money Power, Politics and Governance"

1. The article “The Age of the Aam Crorepati” (The Hindu, June 20) is a stinging piece of writing on the susceptibility of politics to money power. the term aam crorepati is seemingly an oxymoron. But it serves to highlight the fact that the newly constituted Lok Sabha is under the sway of millionaire politicians. With 836 million people still “getting by” on less Rs.20 a day and the average worth of a Lok Sabha MP being worth Rs.51 million, the gap between the poor and their rich representatives is glaring. A house of the rich for a nation of the poor is apparently a paradox. But it can be resolved by understanding the correlation between wealth and power. – G.David Milton, Maruthancode.

2. The excellent and informative article makes distressing reading. It highlights the true state of affairs – which is at variance with the picture portrayed – in our elected bodies. Facts speak louder than the din of high-decibel concerns voiced ritualistically in favour of the aam aadmi from time to time. – Satinath Sen, Bangalore.

3. The article has exposed the link between money power and governance. Our political parties have steadily discarded their policies and manifestos, resorting instead to freebies and populist schemes to lure the poor. – T.R.Krishnamurthy, Chennai.

4. The 15th Lok Sabha established the disturbing phenomenon that only people with huge wealth can occupy positions of power, even in a supposedly working democracy like India. Garibi hatao, power to the aam aadmi, and uplift of the weaker sections are all empty slogans. The polity, it seems, has been compromised irreversibly. – J.V.V.Murthy, Coimbatore.

Courtesy: ‘Letters to the Editor’, The Hindu, Madurai, June 22, 2009.

Grateful thanks to M/s.G.David Milton, Satinath Sen, T.R.Krishnamurthy, J.V.V.Murthy and The Hindu.

இன்றைய சிந்தனைக்கு-50:

மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே இறைவன் உன்னைப் படைத்திருக்கிறான். அந்தச் செயல்களைச் செய்து, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கு. – சுவாமி விவேகானந்தர்.

கருத்துக்கள்-14: "கல்விக் கொள்ளை"

கல்விக் கொள்ளையைத் தடுக்க மாநில அரசோ, மத்திய அரசோ கடுமையாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்குப் போய்விட்டது. காரணம், நேரடியாகவே இந்தத்தொழிலில்இருப்பவர்களில் பலரும் அரசியல் புள்ளிகள்தானே. இனம் அத்தனை சீக்கிரமாக தன் இனத்தைக் காட்டிக் கொடுக்குமா? ஜூ.வி. போன்ற புலனாய்வு இதழ்கள்தான் இவர்களின் நிஜமுகங்களை மக்களுக்கு தோலுரித்துக் காட்டவேண்டும்! – வே. சத்தியநாதன், காஞ்சிபுரம், ‘கடிதங்கள்‘, ஜூனியர் விகடன் ஜூன் 24, 2009.

நன்றி: திரு வே.சத்தியநாதன் & ஜூனியர் விகடன்.

My Photo Album-37: "Achu washing clothes"



Achu is a great do-it-yourselfer. When we try to feed him, he refuses; he prefers to eat the food without anybody’s assistance; while walking also, if you try to hold his hand, he shakes it off. He wants to be independent. Here he is seen washing his own clothes. See how totally he is absorbed in the work. Photos taken by Suri using his Canon Powershot A590 camera.

இன்றைய சிந்தனைக்கு-49:

அன்பு, கருணை, தயை, ஒழுக்கம் போன்ற நற்குணங்களால் ஏற்படும் மன நிறைவே சொர்க்கமாகும். நாம் எங்கேயோ சொர்க்கம் இருப்பதாக எண்ணுகிறோம். நமக்கான சொர்க்கத்தை நாம்தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும். – ஸ்ரீ சத்ய சாய்பாபா.

TED Talks: "The Future Beckons You at TED India"

I am a member of the TED Community and great admirer of TED Talks. I have received a mail about upcoming TED conference to be held in Mysore, India during November 4-7, 2009. Under the theme “The Future Beckons,” TEDIndia will be presenting for three days inspiring speakers from the worlds of technology, entertainment, design, science, business and the arts. Join TED India and those who have the opportunity to participate/witness the conference, are most welcome to do so. I am reproducing the mail received by me from TED Team in full:

date Fri, Jun 12, 2009 at 9:30 PM
subject: Join us at TEDIndia!

Dear Members of the TED Community,

We are thrilled to tell you about TEDIndia, the upcoming TED conference to be held in Mysore, India November 4-7, 2009.

About TEDIndia:

Under the theme “The Future Beckons,” TEDIndia will present three days of inspiring speakers from the worlds of technology, entertainment, design, science, business and the arts.

“At a time of huge economic uncertainty, one thing remains clear: There’s been an unmistakable shift of influence to the east,” says TED’s Curator Chris Anderson. “We wanted to examine the future from the vantage point of India, a country that’s re-inventing itself daily and whose influence is reshaping the world.”

Inspired speakers and game-changing ideas, evocative locations and transporting entertainment: TEDIndia offers a vision of the future that’s rich with invention, entrepreneurship, cross-disciplinary problem-solving, unexpected solutions and sensory delight. Hosted in a country that’s reinventing itself – and reshaping the world …

TEDIndia will be held at the incredible high-tech campus built by Infosys to train its thousands of engineering graduates, representing the heart of the Asian outsourcing industry. And while we have not yet announced the speaker program, it’s already shaping up to be an extraordinary line-up. Speakers will include India’s most promising innovators, from entrepreneurs to artists, storytellers to scientists. And about one third of the program will come from outside India. We’ll hear from celebrated global icons as well as undiscovered talent that’s due broader recognition.

To learn more about the conference, visit http://conferences.ted.com/TEDIndia/.

How to Attend:

1. Apply for a TEDIndia Membership: The registration fee for TEDIndia is US$2,000, plus $400 for all housing, meals and airport shuttle. Apply online here: http://www.ted.com/registration/tedindia.

2. Apply for a Reduced Price Membership: We will be offering a limited number of spots to individuals in the education and nonprofit worlds at a reduced price of US$1,000, plus $400 for all housing, meals and airport shuttle. Apply online here: http://www.ted.com/registration/tedindia

3. Apply to be a TEDIndia Fellow: We will be welcoming 100 Fellows to TEDIndia free of charge. Applications for the TED Fellows program close in just one week! To learn more about the program, visit http://www.ted.com/fellows. Apply online here: http://www.ted.com/fellows/apply.

We hope that you will consider joining us at TEDIndia!

All the best,

The TED Team
—–
Grateful thanks to TED Team

நினைத்துப் பார்க்கிறேன்-4:

இரண்டு நாட்களாக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். ஆன்லைன்‘ (online) நூலகமான, ‘உலகப் பொது நூலகத்தில்(World Public Library: http://worldpubliclibrary.org/) உறுப்பினரானேன் நேற்று. வெகுநாட் கனவு நேற்றுத்தான் நிறைவேறியது. இன்னும் ஓராண்டு காலத்திற்கு ஐந்து லட்சம் புத்தகங்களைடௌன்லோட்(download) செய்யவும், படிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நினைத்தாலே இனிக்கிறது! அதுமட்டுமல்ல, ‘உலக புத்தகத் திருவிழா‘ (World eBook Fair) தொடங்கும் ஜூலை 4ம் நாள் முதல் ஒரு மாதகாலம் இருபத்திரண்டு லட்சம் புத்தகங்களுக்கு மேல்டௌன்லோட்செய்யலாம், படிக்கலாம்! ஒரு புத்தகப்பிரியனுக்கு இதைவிட மகிழ்ச்சியான சேதி என்ன இருக்க முடியும்?

கிரிடிட் கார்டுமூலம் 8.95 அமெரிக்க டாலர்கள் ஆண்டுச் சந்தா செலுத்தியவுடன் இந்தப் புத்தகப் பொக்கிஷ அறையைத் திறக்கும் சாவி என் கையில் வந்தது.

முதலில் கிடைத்த ஜாக்பாட்ப்ராஜெக்ட் மதுரை‘ (Project Madurai: http://www.infitt.org/pmadurai/index.html). சங்கத் தமிழ் இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், மற்றும் ஜெயகாந்தனின் மூன்று சிறுகதைத் தொகுப்புகள், கல்கியின் நாவல்கள், ஈழத் தமிழரின் படைப்புகள் என்று எவ்வளவோ!

கிட்டத்தட்ட நான்கு மணி நேரம்டௌன்லோட்செய்வதிலேயே கழிந்தது. அதற்காக ஒன்றுமே படிக்காமல் விட்டுவிட முடியுமா? முதல் நாளே ஏதாவது படிக்க வேண்டாமா? படித்தேன் ஜெயகாந்தனின்யுகசந்திஎன்ற சிறுகதையை. என்னவொரு அற்புதமான படைப்பு! பொறுமையின் இலக்கணமாய், சகிப்புத்தன்மையின் சிகரமாய், பார்ப்பதற்கு சென்ற நூற்றாண்டின் சின்னமாய்த் தோன்றினாலும், இந்தக் காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் ஆற்றல் மிகுந்த கௌரிப்பாட்டி ஒரு வித்தியாசமான படைப்பு. (…நேற்றுப் பிறந்த குழந்தைகளெல்லாம் அதோ ரிக்ஷாவிலும், ஜட்காவிலும், சைக்கிளிலும் பரந்து, பரந்து ஓடுகிறார்கள். மழையும், வெயிலும் மனிதனை விரட்டுகின்ற கோலத்தை எண்ணி பாட்டி சிரித்துக்கொண்டாள். அவளுக்கு இதுவெல்லாம் ஒரு பொருட்டா? வெள்ளமாய்ப் பெருகிவந்த வாழ்வின் சுழிப்பிலும், பின் திடீரென வறண்ட பாலையை மாறிப்போன வாழ்க்கை நெருப்பிலும் பொறுமையாய் நடந்து பழகியவளை, இந்த வெயிலும் மழையும் என்ன செய்யும்? …)

இந்த நேரத்தில் சில வருடங்கள் பின்னே சென்று, நினைத்துப் பார்க்கிறேன். காரைக்குடி புத்தகத் திருவிழாவை நடத்துவது என்று காலை முன்வைத்தாகிவிட்டது. ‘கையைச் சுட்டுக்கொள்ளப் போகிறாய்! சிக்கலில் மாட்டிக்கொள்ளப் போகிறாய்! என்று அனைவரும் எச்சரித்துக் கொண்டிருந்த நேரம். அதற்கு என் உள்மனதில் இருந்து கீதை பதில் சொல்லிக் கொண்டிருந்தது: “The doer of good never comes to harm.” “No effort is ever wasted.” “My devotee never perishes.”

முன்னனுபவம் இல்லாமல் இப்படி ஏதோ தைரியத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தோம். நகரின் முக்கிய பொதுநல அமைப்புக்களும், பிரமுகர்களும் ஆதரவு தர முன்வந்தனர். அதுவே ஓரளவு தைரியத்தைக் கொடுத்தது. இருந்தாலும் உதறல்தான், எல்லாம் நல்லபடியாக அமையவேண்டுமே!

முதல்கோணல் முற்றிலும் கோணலாகிவிடுமே! எனவே துவக்க விழா மிகச் சிறப்பாக அமைய வேண்டும், மிகச் சிறந்த எழுத்தாளர் ஒருவர் வந்து துவக்கி வைத்தால் சிறப்பாக இருக்குமே என்று சிந்தித்துக் கொண்டிருந்தோம் . நிறைய ஆலோசனைகள். ஆனால் என் மனதில் திரு ஜெயகாந்தன் அவர்களை எப்படியாவது அழைத்துவந்து, சிறப்புரையாற்ற வைக்கவேண்டும் என்ற ஆசை. என் உள்ளக்கிடக்கையை கவிதா பதிப்பகம் திரு சேது.சொக்கலிங்கம் அவர்களிடம் கூறினேன். ‘எனக்கு இந்த உதவியை மட்டும் செய்யுங்கள். நீங்கள் வேறெதுவும் செய்யவேண்டாம்‘ என்றேன். ‘கவலைப்படாதே சூரி! நான் ஏற்பாடு செய்கிறேன்என்று நம்பிக்கை தந்தார் அவர். அப்போது அவர் ஜெகேயின் புத்தகங்களை தொகுத்து வெளியிட்டிருந்தார். அவர் சொன்னபடியே செய்தது மட்டுமல்ல, ஜேகேயை காரைக்குடிக்கு அழைத்து வரும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

இங்கே நான் ஒன்றைப் பதிவு செய்யவேண்டும்: காரைக்குடி புத்தகத் திருவிழா நிறைய அற்புதமான, ஆற்றல்மிக்க மனிதர்களுடன் (எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள்) நெருங்கிப் பழகும் வாய்ப்பைத் தந்தது. மேலும் அவர்களது அன்பிற்கும், நட்பிற்கும் ஆளாக்கியது. அப்படிக் கிடைத்த ஒரு அரிய நண்பர்தான் திருகவிதாசொக்கலிங்கம் அவர்கள்.

திறப்புவிழாவில் ஜேகேயின் சொற்பொழிவு அற்புதமாக அமைந்தது. வாசகர் கூட்டம் ஆடாமல், அசையாமல் கட்டுண்டு அவரது தெளிவான சிந்தனையில் வடிந்த சிறப்புரையில் மயங்கிக் கிடந்தது.

பிறகு கேட்பானேன்? தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளும் அமைய, முதல் காரைக்குடி புத்தகத் திருவிழாவே வெற்றிகரமாக அமைந்தது. இன்று அது ஏழாவது புத்தகத் திருவிழா வரை நீண்டுவிட்டது; இன்னும் நீளும். இவ்வாறு கம்பன் விழா போல், காரைக்குடி புத்தகத் திருவிழாவும் காரைமா நகருக்கு மேலும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் அசைபோட மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. இந்த நேரத்தில் புத்தகத் திருவிழா வெற்றி பெற கடும் உழைப்பையும், ஆதரவையும் நல்கிய அனைத்து உள்ளங்களையும் நன்றியுடன் போற்றி மகிழ்கின்றேன்.

Poem of the day-58: "Good-bye, Vacation!" by Mary D.Brine

Good-by, vacation, you jolly old time—
Good-by to your idle hours;
Good-by to dear fields and mountains and glens,
And the beautiful sweet wild flowers;
Good-by to the hours of frolic and fun,
And to freedom’s all-glorious reign;
For vacation is ended, it’s season is o’er,
And now for our school life again.

No longer the fences we’ll merrily scale,
Nor climb to the tree-tops each day;
But the ladder of learning before us is raised,
And upward we’ll wend our way.
Ah, deep in our hearts will the memory lie
Of the happy old days so dear,
And over our books we will wearily sigh,
“Oh, would our vacation were here!”

The bright days yet linger, the grass still is green,
Not yet have the mountains turned gray;
But what are the charms of sweet nature, alas!
Since vacation has vanished away?
But there is one comfort—the seasons roll round,
And all in good time we shall hear
Dame Nature’s glad joy-bell ring gayly once more,
“School is out, and vacation is here.”

Courtesy: Harper’s Young People, September 14, 1880 (An Illustrated Weekly) and Project Gutenberg.

My Scrapbook-1: "I become a member of World Public Library"

Today is a happy and memorable day for me. I became a member of World Public Library and have started downloading books which I love. Without any planning or thought, it just happened today. Of course, I knew long back that one could become a member of World Public Library and thus get the benefit of accessing 5,00,000 books. All one has to do is pay $ 8.95. But somehow it seemed to be out of my grasp.

Today, thanks to my friends Dr.V.Sundaram, who provided his credit card and Dr.S.Malaikkani, who advanced the money, within minutes I became a member. It was so easy. For one full year, I will have the right to download whatever books I love/like from their collection.

On perusing the catalogs and collections of WPL, I found Project Madurai, which is a treasure trove of classic Tamil literature, Bhakti literature and some modern short stories and novels too. Most of the afternoon was spent in downloading selected books of my choice. I realize now compared to the wonderful opportunity to download and read some great books, the payment involved is almost nothing.

Further, there is another added attraction. Members get free access to more 20 lakh books of World eBook Fair Collection from July 4 to August 4, 2009.

So I am very happy today. I intend to spend a few hours daily at their site downloading the books of my choice. If you are a booklover like me, why don’t you also become a member of WPL?

Hope I will have matter to post in this blog more frequently now. I look forward to it.

இன்றைய சிந்தனைக்கு-48: "எப்பொழுதும் சுறுசுறுப்பாயிருங்கள்!"

உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கலானால் உங்களுக்கு மிகுந்த மன அமைதி கிட்டும். அப்பொழுது பயனுள்ள ஒரு செயலைச் செய்தோம் என்ற மனத்திருப்தி உங்களுக்குக் கிட்டும். மனிதன் வெறும் உணவினால் மட்டும் வாழ்பவன் அல்ல என்ற பழமொழியை நினைத்துப்பாருங்கள். பணத்தைக் காட்டிலும் மன அமைதியே பெரிது என நீங்கள் எண்ணினால் அதிக வருமானத்துடன் கூடிய ஆனால் நீங்கள் விரும்பாத ஒரு வேலையை விட, குறைவான வருமானத்துடன் கூடிய மன அமைதி தரும் ஒரு வேலையை நீங்கள் மனமுவந்து ஏற்பீர்கள். – ஸ்ரீ சுவாமி சிவானந்தர்

மன அமைதியைப் பெறுவது எப்படி?” என்ற சுவாமி சிவானந்தர் எழுதிய கட்டுரையிலிருந்து

நன்றி: “இமைய கீதம்“, ஆன்மிக மாத இதழ், ஜூன் 2009.

நினைத்துப் பார்க்கிறேன்-3: "உலக இரத்த தான தினம்"

இன்று ஜூன் 14-ம் நாள் இரத்த தான தினம்’ . இரத்த குரூப்களை கண்டுபிடித்த அறிவியல் மாமேதை கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் பிறந்தநாள். இந்நாளை உலக சுகாதார அமைப்புஉலக இரத்த தான தினமாக‘ தேர்ந்துள்ளது. இதுவரை இரத்த தானம் லட்சக்கணக்கான மனிதர்களைக் காத்துள்ளது; இன்னும் எத்தனையோ லட்சம் பேரை காப்பாற்றும். இவ்வாறு உயிர்களைக் காப்பாற்றும் அரும்பணி ஆற்றும் அனைவருக்கும் நன்றி நவிலுமுகமாக இத்தினம் கொண்டாடப் படுகிறது.

எங்கள் வீட்டைப் பொறுத்தவரை, நானறிந்த வரையில், என் தம்பி நெல்லையப்பன் கல்லூரியில் பயிலும் காலத்தில் இரத்த தானம் செய்திருக்கிறான். ஆனால் அவன் வீட்டிலோ அல்லது வெளியிலோ யாரிடமும் அதைப்பற்றி சொல்லிக்கொண்டதில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு அவனுடைய பேப்பர்களை புரட்டிக் கொண்டிருந்தபோது தற்செயலாக இரத்த தானத்திற்காக அவனக்கு வழங்கப்பட்ட சான்றிதழைக் கண்டபிறகுதான் அவன் ரத்த தானம் செய்த உண்மை எனக்குத் தெரிந்தது.

அடுத்து எனது பெருமதிப்பிற்குரிய நண்பர் ரோட்டரியன் திரு முத்து.பழனியப்பன் அவர்களை இன்று நினைத்துப் பார்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நூறு முறைக்கும் மேலாக இரத்த தானம் செய்த சாதனையாளர் அவர். அவரது துணைவியாரும் பலமுறை ரத்த தானம் செய்துள்ளார். காரைக்குடி நகரிலுள்ள பல சேவை அமைப்புகளும் ஒருங்கிணைந்து அவருக்குகுருதிக்கொடை வள்ளல்என்ற பட்டம் வழங்கி பாராட்டிச் சிறப்பித்தது நினைவிற்கு வருகிறது.

காரைக்குடி நகரில் எந்த பொதுநல நிகழ்ச்சி நடந்தாலும் அதில் திரு முத்து.பழனியப்பனின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். காரைமா நகரின் தொழில் வணிகக் கழகத்தின் நெடுநாள் தலைவர் அவர். காரைக்குடி புத்தகத் திருவிழா மூலம் அவரது இனிய நட்பு எனக்குக் கிடைத்தது. எத்தனையோ முறை நான் உதவி வேண்டி அவரிடம் சென்றிருக்கிறேன். அத்தனை முறையும் அன்போடு அவர் செய்த உதவியை எந்நாளும் என்னால் மறக்க முடியாது.

திரு முத்து.பழனியப்பன் அவர்களையும், தம்பி நெல்லையப்பனையும், அவர்களைப்போன்று தன்னலமில்லாமல் பிற உயிர்காக்க குருதிக்கொடை வழங்கிய நல்ல உள்ளங்கள் அனைவரையும் இந்நாளில் போற்றி மகிழ்கிறேன்.

இன்றைய சிந்தனைக்கு-47: "காண்பது கேடு!"

சும்மா இருப்பதே சுகம்என்று சிலர் யாதொரு வேலையும் செய்யாமல் பிறர் சோற்றை உண்டு காலந்தள்ளுகின்றனர். நம்மவர்களுள் ஒருவன் சம்பாதித்தால் ஒன்பது பேர்கள் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கமாய் இருக்கிறது. இதுதான் நமது தேசம் தரித்திரத்தை அடைவதற்கு முக்கிய காரணம். ஒவ்வொரு மனிதனும் உழைப்பதற்காகவே பிறந்திருக்கிறான். சீட்டாடுவதும், இராப்பகலின்றித் தூங்குவதும், வம்பு பேசுவதும் உழைப்பாகாது. தனக்கும், தன் குடும்பத்திற்கும் உபயோகமான தொழிலைச் செய்வதே உழைப்பாகும். வேலை செய்வதானது, கேவலம் சம்பாத்தியத்தை உத்தேசித்து மட்டுமல்ல; பல ஜனங்களுக்கும் உபயோககரமான ஓர் காரியத்தைச் செய்தலாம். எவன் வேலையின்றித் தூங்குகிறானோ அவனைக் காண்பது கெடுதல்; தீண்டுவது தீது.”

மனிதன் வேலை செய்யப் பிறந்தான்என்ற தலைப்பில்இந்தியாபத்திரிகையில் (5.1.1907) மகாகவி பாரதியார் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.

நன்றி: “பாரதி ஞானம்“, மே 2003 (தனிச்சுற்று மாத இதழ்).

நினைத்துப் பார்க்கிறேன்-2: "ஸ்பெக்ட்ரம் ஸ்கேம்"

பாரதி புத்தகாலயம், சென்னை, வெளியிட்டுவரும்புதிய புத்தகம் பேசுதுமாத இதழின் சந்தாதாரர் நான். இது போன்ற பல பத்திரிக்கைகளுக்கு சந்தா செலுத்திவிட்டு படிக்க முடியாமல் போகிறதே என்ற குற்ற உணர்வு அவ்வப்போது தோன்றும். அதிலும் பல இதழ்களுக்கும் ஆயுட் சந்தா செலுத்தியிருக்கிறேன். தரமான இதழ்களுக்கு தார்மீக ஆதரவு என்று சொல்லி சமாதானப் படுத்திக் கொள்வேன்.

நேற்றுபுதிய புத்தகம் பேசுதுமே 2009 இதழை புரட்டிப் பார்த்தேன். பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள புதிய புத்தகங்கள் பற்றிய விளம்பரத்தைப் பார்த்தேன். அதில் ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. அது, அன்வர் என்பவர் எழுதியஸ்பெக்ட்ரம் மெகா ஊழல்” எனும் குறும் புத்தகம். நான் அந்தப் புத்தகத்தை இன்னும் பார்க்கவோ படிக்கவோ இல்லை. விலை ரூபாய் ஐந்து என்று போட்டிருப்பதால் குறும்புத்தகம் என்று எழுதிவிட்டேன்.

இந்த ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் பற்றி நிறைய பார்த்து, படித்து, கேட்டு அலுத்துப் போன நிலையில் மறுபடியும் ஒரு புத்தகம் ஏன்? அதிலும் நடந்த பாராளுமன்ற தேர்தலில் துளிகூட பாதிப்பை ஏற்படுத்தாத அதைப் பற்றி நினைப்பதாலோ, பேசுவதாலோ அல்லது எழுதுவதாலோ என்ன பயன்? சம்பந்தப்பட்ட அமைச்சர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது தோன்றியது: “எதிர்த்து நின்ற கட்சிகள் இந்தச் செய்தியை அத்தொகுதி மக்களின் சரியான கவனத்திற்கு கொண்டு செல்லவில்லையோ? இந்திய சரித்திரத்திலேயே மிகப்பெரிய ஊழல், ரூபாய் ஒரு லட்சம் கோடி என்ற அளவில் பேசப்பட்ட ஊழல்! இல்லை, மக்களுக்கு அதையெல்லாம் பற்றி கவலைப்பட நேரமில்லையோ? எப்படியோ தொலையட்டும்!”

அதைவிட அடுத்த கொடுமை. பிரதமரின் கரம் வலுப்பெற்றுவிட்டது; மந்திரி சபை அமைக்கும் பிரதமரின் உரிமையில் யாரும் தலையிடமுடியாது; கறைபடிந்த நபர்களை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள மாட்டார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் சில கூட்டணிக் கட்சிகள் அத்தனையும் பொய் என்று நிரூபித்தன. மீண்டும் அதே நபர் அதே துறைக்கு அமைச்சராக்கப்பட்டார். (இன்றைய பாராளுமன்றத்தில் கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள நிறையப்பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்று ஊடகங்கள் தரும் செய்தி வேதனையைக் கூட்டுகிறது)

ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற பிரச்சனை கிட்டத்தட்ட குப்பையில் போடப்பட்டுவிட்டது. (இன்னும் சில வழக்குகள், பொது நல வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தாலும், முடிவில் உண்மை வெளியாகுமா? குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? என்ற கேள்விகள் எழும்போது நமக்கு விரக்திதான் ஏற்படுகிறது.) இருப்பினும் இது போன்ற பிரச்சனைகளில் ஒரு சிலராவது நம்பிக்கை இழக்காமல், விடாமல் ஏதாவது முயற்சி செய்துவருவது சற்று ஆறுதலாக இருக்கிறது.

பார்க்கலாம், என்றைக்காவது ஒரு நாள் உண்மை வெளியாகுமா அல்லதுசத்திய மேவ ஜெயதேஎன்பது வெறும் கோஷந்தானா என்ற கேள்விகளுக்கு காலம்தான் பதில் கூறவேண்டும்.

நினைத்துப் பார்க்கிறேன்-1: "டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களும், திரு.கௌதம நீலாம்பரன் அவர்களும்"

இன்று காலை நடை பழகிவிட்டு, அப்படியே கடைக்குப்போய் ஹிந்து நாளிதழ் வாங்கிவரச் சென்றேன். கடையில் இம்மாத அமுதசுரபி இதழ் தொங்கக் கண்டேன். தரமான தமிழ் இதழ்களை ஊக்குவிக்க வேண்டும் என்று திடீரென்று ஞானம் பிறக்க, ஒரு பிரதியை வாங்கினேன். நான் அமுதசுரபி வாசகனல்ல. எப்போதாவது திடீரென்று இதுபோல் வாங்கினாலோ அல்லது நூலகம் அல்லது வேறு யாரிடமோ வாங்கிப்படித்தால்தான் உண்டு.

வீட்டிற்குச் சென்று பக்கத்தைப் புரட்ட ஆரம்பித்ததும் முதலில் கண்டது, நான் நினைத்ததுபோல் திரு விக்கிரமன் ஆசிரியரல்ல என்பதும், டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் ஆசிரியர் என்பதும்தான். உடனே காரைக்குடியில் புத்தகத் திருவிழா அமைப்பாளராக திருப்பூர் கிருஷ்ணன் அவர்களை அழைத்ததும், அவர்கள் அன்புடன் இசைந்து, காரைக்குடி வந்து கலந்துகொண்டு நண்பர் பசுமைக்குமாரின் நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றியதும் நினைவிற்கு வந்தது.

பக்கத்தைத் திருப்பிக்கொண்டே வந்ததில்எழுத்துலகம்பகுதியில்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள்என்ற தலைப்பில் திரு கௌதம நீலாம்பரன் பற்றிய குறிப்பு கவனத்தை ஈர்க்க, அதைப் படிக்கலானேன். அவர் தமிழில் சரித்திரக் கதைகள் எழுதுவதில் சிறந்தவர் என்றும், பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்றும் அறிவேன். அவரும் காரைக்குடி புத்தகத் திருவிழாவிற்கு எங்கள் அழைப்பை ஏற்று, எழுத்தாளர்வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாசகர்கள் அனைவரையும் மகிழ்வித்ததும், பின்னர் சிறப்புரையாற்றியதும் மனத்திரையில் ஓடியது.

மேலும் அன்றிரவே அவர் சென்னை திரும்ப வேண்டியிருந்ததால், தனியார் சிறப்புப் பேருந்தில் பதிவு செய்து வைத்திருந்தோம். நானும் இன்னொரு நண்பரும் அவரை வழியனுப்ப காரைக்குடி பெரியார் சிலை அருகே பேருந்துக்காகக் காத்திருந்தபோது, அவரோடு உரையாடிய இனிய அனுபவமும் நினைவிற்கு வருகிறது. மலர்ந்த முகத்தோடு நான் பேசியதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, நிறையத் தெரிந்து வைத்திருக்கிறீர்களே, இதையெல்லாம் எழுதினால் என்ன என்றார். நான் ஏதோ அசடு வழிந்துவிட்டு, நான் புத்தகப்பிரியனே தவிர, எழுத்தாளனல்ல என்று இயலாமையை வெளிப்படுத்தினேன். ஆனால் அவர் அதோடு விட்டுவிடாது, சென்னை சென்றதும் எனக்குக் கடிதம் எழுதி மறுபடியும் என்னை எழுதுமாறு உற்சாகப் படுத்தினார். அதோடு மட்டுமல்லாமல், ‘குங்குமச்சிமிழ்இதழ் ஒன்றும், மற்றும் ஒரு ஆன்மிக இதழ் பிரதியொன்றையும் அனுப்பிவைத்தார். நான் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

மேலும் காரைக்குடி புத்தகத் திருவிழாவின் தொடர்ச்சியாகபுத்தகப் பிரியர்களுக்கான் கையேடுஒன்றை வெளியிட எண்ணியிருந்தேன். அதில் பிரசுரிக்க அவரிடமிருந்து தமிழில் சரித்திரக் கதைகள் பற்றிய கட்டுரை ஒன்றைக் கேட்டிருந்தேன். ஒரு சிறந்த கட்டுரை ஒன்றை எங்களுக்காக எழுதி, உடனே அனுப்பியிருந்தார். பல பிரச்சினைகளால் அந்தக் கையேடு கனவாகவே முடிந்து போனது. நான் அவருக்குப் பதிலும் எழுதவில்லை என்பதைக் குற்ற உணர்வோடு தற்போது நினைவுகூர்கிறேன்.

இருக்கட்டும். நா.பா.வின் இலக்கிய மாணவரான, இவர் சிறப்புகளை இங்கே பதிவு செய்வதில் மகிழ்கிறேன். ‘தமிழ் வாகைச் செம்மல்‘, ‘பேராசிரியர் கல்கி இலக்கிய விருது‘, செங்கமலத்தாயார் அறக்கட்டளை அளித்த 2008 ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர் போன்ற பல பெருமைகள் அவரைத் தேடி வந்துள்ளன. இவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட சரித்திர, சமூகச் சிறுகதைகளைத் தொகுத்து நிவேதிதா புத்தகப் பூங்கா வெளியிடவிருக்கிறது என்பது பெருமகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த நூலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மேலும் மணிவிழாக் காணும் திரு கௌதம நீலம்பரனும் அவர்களது குடும்பத்தினரும் எல்லா நலன்களும் பெற்று சிறப்புடன் வாழவும், அவர் மேலும் மேலும் சாதனைகள் படைக்கவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

A Thought for Today-203:

The best way to find yourself is to lose yourself in the service of others – Mahatma Gandhi

இன்றைய சிந்தனைக்கு-46:

உங்கள் உள்ளக்கோயிலைத் திறந்தால் உயர்ந்த ஞானமும், நிறைந்த செல்வமும் சேரும்.

நன்றி: http://www.templedivinesuccess.com

எனக்குப் பிடித்த கவிதை-50: "காத்திருப்பு" – மகரந்தன்

மண்ணில் ஊன்றி
எழுந்து நிற்கும்
விதையாய்
மரம்.

மரத்தை வெட்டினால்
வளையமாகத் தெரிவது
மரத்தின் வயது அல்ல
அது
மனிதனின் செயலுக்காக
மரம் போட்டு வைத்த
மதிப்பெண்.

நியூட்டனுக்கு
ஆப்பிள் மரம்.

புத்தருக்கு
போதி மரம்.

திருமூலருக்கு
அரச மரம்.

நம்மாழ்வாருக்கு
புளிய மரம்.

மாணிக்கவாசகருக்கு
குருந்த மரம்.

ஒவ்வொரு மரமும்
எந்த ஞானிக்காக
காத்திருக்கிறதோ?

நன்றி: மகரந்தன் & “இனிய உதயம்“, இலக்கிய மாத இதழ் (மே 2009).

அன்பும் மனிதநேயமும்

ஒரு எழுத்தாளன், இலக்கியவாதியின் பணி மனிதனை நேசிப்பது. மனிதனின் துன்ப துயரங்களை சொந்தத் துயரமாக வடித்தெடுப்பவனே எழுத்தாளன். ஒரு தேசத்தில் எதன் பொருட்டு உயிர்க்கொலை நடந்தாலும் அதில் இனமோ மொழியோ பிரித்துப் பார்க்கக் கூடாது. உயிர் பலியானவர்கள் சிங்களர் ஆனால் என்ன? தமிழர் ஆனால் என்ன? எல்லோரும் மனிதர்களே. ஆக நமக்குத் தேவையானது அன்பும் மனிதநேயமும்தான்.

உயிரில் தமிழன் உயிர் என்று தனியே இல்லை!” – ஜெயகாந்தன்இனிய உதயம், மே 2009 இதழிலிருந்து.

நன்றி: திரு ஜெயகாந்தன் & “இனிய உதயம்இலக்கிய மாத இதழ்.

கவிதை என்பது…

...கவிதை என்பது மானுடம் கண்டறிந்த எழுத்து வடிவிலான இசை. அது நம்ஆத்மத்தோடு உறவாடுவது. ஆயிரம் பக்கம் எழுதப்பட்ட நோபல் பரிசு பெற்ற ஒரு நாவல் ஏற்படுத்தும் தாக்கத்தை பத்து வரிகள் மட்டுமே கொண்ட ஒரு சிறு கவிதை ஏற்படுத்திவிடும்….

இனிய உதயம் மே மாத இதழில் கவிஞர் நா.காமராசன் நேர்காணலிலிருந்து..

நன்றி: கவிஞர் நா.காமராசன் & “இனிய உதயம்“, மாத இதழ்.

My Photo Album-36: "Some Recent Photos of Achu"





Achu has now moved to Kovilpatti, where his father is working. During my recent visit to his house, I took the above photos with my Canon Powershot A590 camera. My wife says my skill as photographer has much to improve, as Achu looks better in person than in the photos. She is right, especially the angles are not that good. I have sought the help of my friend, Annamalai, who is a great artist and expert photographer. He is yet to take a kind-heart to me in this regard. Probably I will have go after him.

Achu already has a fan club among our friends and relatives. These photos are for them.