தாயுமானவரின் பராபரக்கண்ணி-61:

எண்ணம் அறிந்தே இளைப்பறிந்தே ஏழைஉய்யும்
வண்ணம் திருக்கருணை வையாய் பராபரமே

தாயுமானவரின் பராபரக்கண்ணி-60:

பொய்யன்இவன்  என்றுமெள்ளப்   போதிப்பார்   சொற்கேட்டுக்
கைவிடவும்  வேண்டாஎன்  கண்ணே  பராபரமே  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-59:

உற்றுநினைக்கில் துயரம் உள்ளுள்ளே செந்தீயாய்ப்
பற்றநொந்தேன் என்னைமுகம் பார்நீ பராபரமே

தாயுமானவரின் பராபரக்கண்ணி-58:

அன்னையிலாச் சேய்போல் அலக்கணுற்றேன் கண்ணார
என்னகத்தில் தாய்போல் இருக்கும் பராபரமே.

தாயுமானவரின் பராபரக்கண்ணி-57:

வாயினால்  பேசா  மௌனத்தை  வைத்திருந்தும் 
தாயிலார்   போல்நான்  தளர்ந்தேன்  பராபரமே 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-56:

எத்தால்  பிழைப்பேனோ  எந்தையே  நின்னருட்கே 
பித்தானேன்  மெத்தவும்தான்  பேதை  பராபரமே 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-55:

கொல்லா  விரதம்  குவலயம்எல்லாம்  ஓங்க
எல்லார்க்கும்  சொல்லுவதென்   இச்சை  பராபரமே 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-54:

கண்ணாவாரேனும்  உனைக் கைகுவியாராயின்  அந்த
மண்ணாவார்  நட்பை  மதியேன்  பராபரமே.

தாயுமானவரின் பராபரக்கண்ணி-53:

துச்சமென  வேண்டா  இத்தொல்லுலகில்  அல்லல்கண்டால் 
அச்சம்  மிகஉடையேன்   ஐயா  பராபரமே. 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-52:

நேச  நிருவிகற்ப  நிட்டைஅல்லால்  உன்அடிமைக்கு
ஆசையுண்டோ  நீஅறியாத  தன்றே  பராபரமே  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-51:

சொல்லும் பொருளும் அற்றுச் சும்மா இருப்பதற்கே
அல்லும்  பகலும்  எனக்காசை  பராபரமே  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-50:

சொன்னத்தைத்  சொல்வதல்லால்  சொல்லற என்       
                                                                            சொல்லிறுதிக் 
கென்னத்தைச்  சொல்வேன் எளியேன்  பராபரமே  


தாயுமானவரின் பராபரக்கண்ணி-49:

பாடிப் படித்துலகில் பாராட்டி நிற்பதற்கோ 
தேடி எனை அடிமை சேர்த்தாய் பராபரமே 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-48:

எள்ளளவு  நின்னைவிட  இல்லா  எனைமயக்கில்

தள்ளுதலால்  என்னபலன்  சாற்றை  பராபரமே  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-47:

உற்றுற்று  நாடி  உளம்மருண்ட  பாவியைநீ

சற்றிரங்கி  ஆளத்  தகாதோ  பராபரமே  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-46:

இந்தநாள்  சற்றும்  இரங்கிலையேல்  காலன்வரும்
அந்தநாள்  காக்கவல்லார்  ஆர்காண்  பராபரமே

தாயுமானவரின் பராபரக்கண்ணி-45:

எத்தனைதான்  சன்மம்  எடுத்தெத்தனை  நான்பட்ட  துயர்

அத்தனையும்  நீ  அறிந்ததன்றோ  பராபரமே  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-44:

இன்று  புதிதன்றே  எளியேன்  படுந்துயரம்

ஒன்றும்  அறியாயோ  உரையாய்  பராபரமே 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-43:

நன்றறியேன்  தீதறியேன்  நான்என்று  நின்றவன்ஆர்

என்றறியேன்  நான்ஏழை என்னே  பராபரமே     

தாயுமானவரின் பராபரக்கண்ணி-42:

பாசம்போய்  நின்றவர்போல்  பாராட்டி  ஆனாலும்

மோசம்  போனேன்நான்  முறையோ  பராபரமே 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-41:

வஞ்சனையும்  பொய்யும்  உள்ளே  வைத்தழுக்காறாய்                                                                                               உளரும்

நெஞ்சனுக்கும்  உண்டோ  நெறிதான்  பராபரமே.     

தாயுமானவரின் பராபரக்கண்ணி-40:

துன்பக்  கண்ணீரில்  துளைந்தேற்குன்  ஆனந்த

இன்பக்  கண்ணீர்  வருவதென்னாள்  பராபரமே.   

தாயுமானவரின் பராபரக்கண்ணி-39:

ஐயோ  உனைக்காண்பான்  ஆசைகொண்ட  தத்தனையும்

பொய்யோ  வெளியாப்  பகராய்  பராபரமே.  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-38:

கற்றஅறிவால்  உன்னைநான்  கண்டவன்போல்  கூத்தாடிற்

குற்றமென்றென்   நெஞ்சே  கொதிக்கும்  பராபரமே.   

தாயுமானவரின் பராபரக்கண்ணி-37:

ஆழித்  துரும்பெனவே  அங்குமிங்கும்  உன்அடிமை

பாழில்  திரிவதென்ன  பாவம்  பராபரமே.    

தாயுமானவரின் பராபரக்கண்ணி-36:

எண்ணாத   எண்ணமெலாம்  எண்ணிஎண்ணி  ஏழைநெஞ்சம்

புண்ணாகச்  செய்ததினி  போதும்  பராபரமே.    

தாயுமானவரின் பராபரக்கண்ணி-35:

கன்றினுக்குச்   சேதா   கனிந்திரங்கல்  போலஎனக்

கென்றிரங்கு   வாய்கருணை  எந்தாய்  பராபரமே.  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-34:

உள்ளம்  அறிவாய்  உழப்பறிவாய்  நான்ஏழை

தள்ளிவிடின்  மெத்தத்  தவிப்பேன்  பராபரமே.   

தாயுமானவரின் பராபரக்கண்ணி-33:

கடல்அமுதே  தேனேஎன்  கண்ணே  கவலைப்

படமுடியாது  என்னைமுகம்  பார்நீ  பராபரமே.   

தாயுமானவரின் பராபரக்கண்ணி-32:

கூர்த்த  அறிவத்தனையும்  கொள்ளைகொடுத்து  உன்னருளைப்

பார்த்தவன்நான்  என்னைமுகம்  பாராய்  பராபரமே.