அனுபவக் குறிப்புகள்-6:

பல ஆண்டுகளாக வயிற்றுக்கோளாறு, மார்பின் இடது பக்கத்தில் வலியும், கழுத்து வலியும் இருந்தது. பல ஆயிரக்கணக்கில் மருந்து, மாத்திரைகளுக்கும், என்டோஸ்கோபி ஆய்வுக்கும் செலவு செய்தும் பயனில்லை. 26-வது நலவாழ்வு முகாமில் கலந்துகொண்டு, குடிநீர் சிகிச்சை, அஹிம்சை எனிமா, நின்றுஅமர்ந்துபடுத்து செய்யும் ஆசனங்கள் கற்றேன். எடை எழுபது கிலோவிலிருந்து அறுபது கிலோவாகக் குறைந்தது.

அதிகாலையில் கருவேப்பிலை, கொத்தமல்லி, வல்லாரை, அருகம்புல் அவற்றுள் ஒன்றின் சாறு, காலைமாலை தேங்காய் பழங்கள், மதியம் வழக்கமான சமைத்த உணவு அளவாகச் சாப்பிட்டேன்.

வயிற்றுக் கோளாறு, நெஞ்சு வலி, கழுத்துவலி எல்லாம் மறைந்துவிட்டன.

திரு .அழகன் (வயது 43), ‘இயற்கை மருத்துவம்மாத இதழ் (ஆகஸ்ட் 2009).

நன்றி: திரு .அழகன் மற்றும்இயற்கை மருத்துவம்மாத இதழ்.

அனுபவக் குறிப்புகள்-5:

மூன்று ஆண்டுகளாகக் காதில் வலி. உடல் நலத்திலும் சிரமங்கள் இருந்தன. ஸ்கேன் எடுத்ததில், மூளையில் 38 .செ.மீ. கட்டி இருப்பது தெரிந்தது. ஆறு மாதங்கள் மருந்து சாப்பிடுங்கள். குணமாகவில்லை என்றால் அறுவை சிகிச்சை செய்யலாம் என்பது மருத்துவர்கள் ஆலோசனை. இயற்கை மருத்துவத்தைப் பின்பற்றி கட்டியை குணப்படுத்த முடிவு செய்தேன். காலை, மாலை யோகாசனங்கள் செய்தேன். காலை பதினோரு மணிக்கு பழங்கள், இரவு ஏழு மணிக்குள் பசுங்கலவை, இடையில் பழச்சாறு என முடிவு செய்தேன். இரண்டு மாதம் கழித்து ஸ்கேன் பார்த்ததில், 16 .செ.மீ. அளவுக்கு கட்டி குறைந்து விட்டது. தொடர்ந்து ஆறு மாதத்தில் கட்டி முற்றிலும் கரைந்து விட்டது.

பி.காளிதாஸ் (வயது 33)

நன்றி: திரு பி.காளிதாஸ் மற்றும்இயற்கை மருத்துவம்மாத இதழ்.

அனுபவக் குறிப்புகள்-4: "மண் குளியல்"

கரையான் புற்றுமண்ணைக் குழைத்து உடல் முழுவதும் பூசி, குளியல் செய்தேன். வேர்க்குருவும், தடிப்புகளும் மறைந்து விட்டன.

– ‘இயற்கை மருத்துவமாத இதழில் திரு வி.சுந்தர்.

நன்றி: திரு வி.சுந்தர் மற்றும்இயற்கை மருத்துவம்மாத இதழ்.

அனுபவக் குறிப்புகள்-3: "உடல் எடை குறைந்தது"

என் வயது முப்பத்துநான்கு. நான்கு மாதங்களுக்கு முன்பு என் எடை 88 கிலோ. எடையைக் குறைப்பதற்காக இயற்கை உணவிற்கு மாறினேன். காலையில் உண்பதில்லை. மதியம் முற்றிய தேங்காய் ஒன்றும், இரவு ஏழு மணிக்குள் சுமார் பதினைந்து வாழைப்பழங்களும் சாப்பிட்டேன். தீபாவளி, பொங்கல் நாட்களில் மட்டும் சமைத்த உணவு சாப்பிட்டேன். இப்போது என் எடை 55 கிலோ. – திரு.எம்.பாபு, கும்பகோணம்.
நன்றி: “இயற்கை நாதம்”, இயற்கை நல மாத இதழ், பிப்ரவரி 2005. ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்க வெளியீடு.

அனுபவக் குறிப்பு-2: "இயற்கை உணவால் மாதவிலக்குக் கோளாறுகள் நீங்கின"

நான் ஒரு மாத மாலமாக இயற்கை உணவு உண்டு வருகின்றேன்; கணவில்லாத தூக்கம் வருகிறது; காலையில் சீக்கிரம் எழுந்துவிட முடிகிறது; மாதவிலக்குப் பிரச்னை நீங்கிவிட்டது. – திருமதி துர்க்காதேவி, கும்பகோணம்.
நன்றி: இயற்கை நாதம், செப்டம்பர் 2008 (ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்க வெளியீடு)

அனுபவக் குறிப்பு-1 "இயற்கை உணவின் அற்புதம்" :

சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் தாயாருக்கு கருப்பையில் பிரச்னை ஏற்பட்டது. புற்றுநோயாக இருக்கலாம் என்றும், சென்னை சென்று புற்றுநோய் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவது நல்லது என்றும் டாக்டர்கள் ஆலோசனை கூறினார்கள். ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் செயலரை அணுகி ஆலோசனை கேட்டேன். அவர் சொல்லியபடி என் தாயாருக்கு உணவு தயாரித்துக் கொடுத்தேன்.

காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல், கரிசாலை, கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை, வல்லாரை, புதினா, மணத்தக்காளி முதலிய மூலிகைகளின் ஒன்றின் சாறு ஒரு டம்ளர் அளித்தேன். மதிய உணவாக பழக்கலவையும், காய்கறிப் பசுங்கலவையும் கொடுத்தேன். இரவில் தேங்காய், பழங்கள் மட்டும் கொடுத்தேன்.

ஆறு மாதங்கள்தான் உயிரோடு இருப்பார் என்று கெடுவிதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்த என் தாயார் மூன்று மாதங்களில் முழு நலம் பெற்றார்கள்.
இன்று அவர்களுக்கு வயது அறுபத்தி இரண்டு. தமது வேலையைத் தாமே செய்துகொண்டு, பிறர்க்குப் பாரமாக இல்லாமல், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

நானும் காலையில் யோகாசனம், ஆறு டம்ளர் தண்ணீர் அருந்துதல், ஓரளவு இயற்கை உணவு, உண்ணாநோன்பு, முதலியவற்றைப் பின்பற்றி எந்த நோயும் இல்லாமல் நலமாக வாழ்கிறேன்.

– எஸ்.ஆர்.கணேசன், கரைகண்டம்சாத்தனூர்.
நன்றி: இயற்கை மருத்துவம், ஜூலை 2004 ( மதுரை இயற்கை மருத்துவ சங்க வெளியீடு)