ஹைகூ-13:

இளைப்பாற வா
சும்மா கிடக்கிறது
எனது நிழல்.

நன்றி: திரு ராஜமுருகுபாண்டியன்

ஹைகூ-13:

இளைப்பாற வா
சும்மா கிடக்கிறது
எனது நிழல்.

நன்றி: திரு ராஜமுருகுபாண்டியன்

ஹைகூ-12:

தாத்தா விட்டுப்போனது
இது ஒன்றுதான்
என் பெயர்.

– நன்றி: ராஜமுருகுபாண்டியன்

ஹைகூ-12:

தாத்தா விட்டுப்போனது
இது ஒன்றுதான்
என் பெயர்.

– நன்றி: ராஜமுருகுபாண்டியன்

ஹைகூ-11:

அறியாமையை
சேகரித்தோம்
வாக்குப்பெட்டிகள்.
– ராஜமுருகுபாண்டியன்
நன்றி: திரு ராஜமுருகுபாண்டியன் அவர்கள்

ஹைகூ-11:

அறியாமையை
சேகரித்தோம்
வாக்குப்பெட்டிகள்.
– ராஜமுருகுபாண்டியன்
நன்றி: திரு ராஜமுருகுபாண்டியன் அவர்கள்

ஹைகூ-10:

தலையில் வழுக்கை
முகத்தில் கிருதா
இடம் மற்ற முடியுமா?

– எம்.ஜி.கன்னியப்பன்

நன்றி: எம்.ஜி.கன்னியப்பன் & விகடன் தீபாவளி மலர் 2005.

ஹைகூ-10:

தலையில் வழுக்கை
முகத்தில் கிருதா
இடம் மற்ற முடியுமா?

– எம்.ஜி.கன்னியப்பன்

நன்றி: எம்.ஜி.கன்னியப்பன் & விகடன் தீபாவளி மலர் 2005.

ஹைகூ-9:

மாமூலாக வந்து போகிறது
தண்ணீர் லாரி
போலீஸ் காலனியில்.
– மு.முருகேஷ்
நன்றி: திரு.மு.முருகேஷ் & விகடன் தீபாவளி மலர் 2005.

ஹைகூ-9:

மாமூலாக வந்து போகிறது
தண்ணீர் லாரி
போலீஸ் காலனியில்.
– மு.முருகேஷ்
நன்றி: திரு.மு.முருகேஷ் & விகடன் தீபாவளி மலர் 2005.

ஹைகூ-8:

எறும்பின் மீது
விழுந்தும் நசுக்கவில்லை,
ஆலமரத்தின் நிழல்.

நன்றி: லலிதானந்த் & விகடன் தீபாவளி மலர் 2005.

ஹைகூ-8:

எறும்பின் மீது
விழுந்தும் நசுக்கவில்லை,
ஆலமரத்தின் நிழல்.

நன்றி: லலிதானந்த் & விகடன் தீபாவளி மலர் 2005.

ஹைகூ-7:

கறுப்புப் பணத்திலும்
காந்தி சிரிக்கிறார்
வெள்ளையாக.

– பூங்காற்று தனசேகர், விகடன் தீபாவளி மலர் 2005.

ஹைகூ-7:

கறுப்புப் பணத்திலும்
காந்தி சிரிக்கிறார்
வெள்ளையாக.

– பூங்காற்று தனசேகர், விகடன் தீபாவளி மலர் 2005.

ஹைகூ-6:

பழைய சைக்கிள்
இருட்டுக்குத் துணைவரும்
செயின் உரசும் சப்தம்.
– எம்.ஜி.கன்னியப்பன்.

நன்றி: திரு. எம்.ஜி.கன்னியப்பன் & விகடன் தீபாவளி மலர் 2005.

ஹைகூ-6:

பழைய சைக்கிள்
இருட்டுக்குத் துணைவரும்
செயின் உரசும் சப்தம்.
– எம்.ஜி.கன்னியப்பன்.

நன்றி: திரு. எம்.ஜி.கன்னியப்பன் & விகடன் தீபாவளி மலர் 2005.

ஹைகூ-5:

மலையில் உறக்கம்
கடலில் குளியல்
சூரிய நாடோடி.

நன்றி: ஆர்.நடராஜன், விகடன் தீபாவளி மலர் 2005

ஹைகூ-5:

மலையில் உறக்கம்
கடலில் குளியல்
சூரிய நாடோடி.

நன்றி: ஆர்.நடராஜன், விகடன் தீபாவளி மலர் 2005

ஹைகூ-4:

திருடன்
ஜன்னலில் விட்டுச் சென்றுவிட்டான்,
நிலவொளியை.

(எழுதியவர்: விபரம் கிடைக்கவில்லை)

ஹைகூ-4:

திருடன்
ஜன்னலில் விட்டுச் சென்றுவிட்டான்,
நிலவொளியை.

(எழுதியவர்: விபரம் கிடைக்கவில்லை)

ஹைகூ-3: "வளர்ச்சி" – உ.சிவன்

உரமிடாமலேயே
நல்ல வளர்ச்சி,
விலைவாசி!

நன்றி: உ.சிவன், வாகைக்குளம், தமிழன் எக்ஸ்பிரஸ் (மற்ற தகவல்கள் கிடைக்கவில்லை.)

ஹைகூ-3: "வளர்ச்சி" – உ.சிவன்

உரமிடாமலேயே
நல்ல வளர்ச்சி,
விலைவாசி!

நன்றி: உ.சிவன், வாகைக்குளம், தமிழன் எக்ஸ்பிரஸ் (மற்ற தகவல்கள் கிடைக்கவில்லை.)

கவிஞர் ஜனநேசனின் ஹைகூ கவிதைகள்-2:

ஆயிரம் கவிஞர்க்கு பாலூட்டியும்
வற்றாத மார்பு…
ஓ, வெண்ணிலா!

வாகனம் முன்னோக்கி விரையும்,
மரம் பின்னோக்கி ஓடும்,
வயதும், வாய்ப்பும்.

அடைமழை
அமோக அறுவடை,
மருந்துக் கடைகளுக்கு!

“சூரியனைக் கிள்ளி” (ஹைகூ கவிதைகள்)
கவிஞர் ஜனநேசன்
விலை: ரூபாய் 15/-
காலம் வெளியீடு
19-1, பிள்ளையார் கோவில் தெரு
கோரிப்பாளையம், மதுரை-625002

கவிஞர் ஜனநேசனின் ஹைகூ கவிதைகள்-2:

ஆயிரம் கவிஞர்க்கு பாலூட்டியும்
வற்றாத மார்பு…
ஓ, வெண்ணிலா!

வாகனம் முன்னோக்கி விரையும்,
மரம் பின்னோக்கி ஓடும்,
வயதும், வாய்ப்பும்.

அடைமழை
அமோக அறுவடை,
மருந்துக் கடைகளுக்கு!

“சூரியனைக் கிள்ளி” (ஹைகூ கவிதைகள்)
கவிஞர் ஜனநேசன்
விலை: ரூபாய் 15/-
காலம் வெளியீடு
19-1, பிள்ளையார் கோவில் தெரு
கோரிப்பாளையம், மதுரை-625002

கவிஞர் ஜனநேசனின் ஹைகூ கவிதைகள்-1

வாழ்க்கை எனும் விஸ்வரூபத்தை ஹைகூ எனும் வாமன அவதாரத்தில் அடக்குகிற உரிமை கவிஞர்களுக்கு உண்டு. ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம். கவிதை எவ்வளவு நீண் டாலும் சரி, எவ்வளவு சுருங்கினாலும் சரி, அது வாழ்வின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கும். மனிதன் கண்டுபிடித்த எந்த விஷயத்தில்தான், மனிதன் வெளிப்படாமல் இருந்திருக்கிறான்?…
இதற்கு கச்சிதமான எடுத்துக்காட்டாகச் சில ஹைகூ கவிதைகள்:
கும்பிட்டு இருந்தால் சோறு வருமோ
விரல்களை விரி தாமரையே
சூரிய சக்தி கிட்டும்
எனும்போது வாழ்வின் ஒட்டு மொத்தமான பிம்பம் கிட்டிவிடுகிறது.அதிலும் கவிஞர் ஜனநேசனுக்கு மிகவும் இளகிய மனசு. சகஉயிர்களிடம் அன்பைப் பொழிகிறார்.
நெல்கட்டு சுமக்கும் காலுக்கு
ஒத்தடம் தரும்
வரப்புப்புல்லின் நன்றி
வரப்பிலே நெற்கதிரைச் சுமந்து கொண்டு விடுவிடுவென்று நடக்கிற கால்களை நாமும் தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்படியொரு நினைப்பு வரவில்லையே. என்ன செய்வது, நாம் கவிஞர்கள் இல்லையே!
பிற உயிர்கள் பால் இவ்வளவு நேசம் காட்டுகிற கவிஞர் தன் உயிரை ஈந்த அந்த உயிரை மறப்பாறா? ஹைகூவில் ஆத்மார்த்த நமஸ்காரம் செலுத்தி விடுகிறார்.
மெல்ல முடி எடுங்கள்
பிள்ளைக்கு வலிக்கும்
படபடத்து வேகும் அம்மாவுடல்.
இவரின் அன்பு எல்லையில்லாதது. காக்கை குருவிகளையும் தாண்டி, மரம், செடி, கொடிகளையும் காதலிக்கிற அன்பு. அவர் வியக்கிறார் –
துப்பிய விஷம் அருந்துகிறாயே
நீ சிவபெருமானோ
ஓ…. மரம்!!
பிறருக்காக விஷம் அருந்துவதுதான் கடவுளின் தன்மை என்றால், இந்த பூமிப் பந்திலேயே நிறையக் கடவுள்கள் இருக்கிறார்கள் என்று இனங்காட்டி விட்டார்.
யோசித்துப் பார்த்தால் வாழ்க்கை என்பதே கவிதைதான் . அதில் இல்லாத மென்மையா, வேகமா, சுகமா, சோகமா, நவரசங்களா? கவிதையில் வாழ்க்கை வருமென்றால், இவையெல்லாம் வரத்தான் செய்யும், வரத்தான் வேண்டும்.
அதுதான் சிருஷ்டி வேலை, சித்து வேலை, அதிசயம், அற்புதம் என்கிற வியப்பு. இதையும் கூடக் கவிதை ஆக்கலாம், ஆக்கியிருக்கிறார் இந்தக் கவிஞர்.
முறுக்கேறி விறைத்தும்
குழைந்து பாடுகிறாயே
வீணைநரம்பு !
இதுதான் கவிதையின் இலட்சணம். இது இவருக்குள் கைவருகிறது.
கவிஞர் ஜனநேசனின் “சூரியனைக் கிள்ளி”க்கு பேராசிரியர் இரா.கதிரேசன் அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து”
சூரியனைக் கிள்ளி” (ஹைகூ கவிதைகள்)