இயற்கை உழவாண்மை-1:

இயற்கை வழி வேளாண்மை மண்ணில் வாழும் பல நுண்ணுயிர்களை வளர்க்கிறது. பயிர்களுக்குத் தேவையான தனிமங்களை இந்த நுண்ணுயிர்கள் வழங்குகின்றன. மண்ணின் பௌதிகத் தன்மையையும் உயர்த்துகின்றன. மண்ணில் புரைகளைக் கூட்டுகின்றன. காற்றோட்டம் கூடுகிறது. ஈரப்பிடிப்பு உயர்கிறது. வடிகால் வசதி கூடுகிறது. மண் அரிப்பு தடுக்கப் படுகிறது. இதன் மூலம் தொடர்ந்து விளைச்சல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இடுபொருள் செலவு குறைகிறது. இதன் மூலம் பண்ணை வருவாய் உயர்கிறது.

கலப்புப் பயிர் சாகுபடி பண்ணையின் மொத்த விளைச்சலைப் பெருமளவு உயர்த்துகிறது. இந்தப் பயிர்கள் நிறையக் கரியை உள்வாங்குவதால், பூமி வெப்பக்கூடமாவது குறைகிறது. கழிவுகளின் சுழற்சி, நிலவளம் பராமரிக்கப்பட உதவுகிறது. ஒவ்வோர் ஆண்டும் இறக்குமதி செய்யப்படும் பருப்பும் எண்ணெய் வித்தும் இங்கேயே உற்பத்தியாக உதவும்.

நமது நாட்டில் தண்ணீர் மற்றும் சக்தி பற்றாக்குறை கூடிய வண்ணம் உள்ளது. ஒரு ஏக்கர் பரப்பில் ஒரு அடி ஆழம் மண் இருந்து, அதில் ஒரு சதவிகிதம் மக்கு உயரும்போது, 74,250 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

டாக்டர் கோ.நம்மாழ்வார் எழுதிய “உழவுக்கும் உண்டு வரலாறு” என்ற நூலிலிருந்து. (விகடன் பிரசுரம், சென்னை, பக்கம் 128, விலை: ரூபாய் 45/- )

நன்றி: டாக்டர் கோ.நம்மாழ்வார் & விகடன் பிரசுரம்.

இயற்கை வாழ்வு – யோகி சுத்தானந்த பாரதியார்

இயற்கை வாழ்வு – யோகி சுத்தானந்த பாரதியார்

பஞ்சபூத நிறை காத்தல் பசித்தபோது பழம் தேங்காய் கொஞ்சுங் காற்று வெய்யிலிலே கொட்ட வேர்வை வேலைசெயல் நெஞ்சு நிரம்ப மூச்சிழுத்தல் நீரில் ஆடித் தியானித்தல் நஞ்சு நீங்கப் பட்டினியால் நல்லியற்கை வாழவாமே.