சித்தர் பாடல்கள்-4: பட்டினத்தார் பாடல்

நெஞ்சுடனே  தாம்புலம்பி  நீலநிறத்  தாளின்ற 
குஞ்சரத்தை  ஆதரித்துக்  கும்பிட்டால்  –  கஞ்சமுடன் 
காம முதல்;  மும்மலத்தின்  கட்டறுத்து  ஞானமுடன் 
பூமிதனில்  வாழ்வார்  எப்போதும்.  

சித்தர் பாடல்கள்-३:

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டே என்கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ!
– அழுகணிச் சித்தர் பாடல்

சித்தர் பாடல்கள்-३:

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டே என்கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ!
– அழுகணிச் சித்தர் பாடல்

சித்தர் பாடல்கள்-2:

கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுவதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்த நமன் என் கண்ணம்மா!
குடியோடிப் போகானோ!
– அழுகணிச் சித்தர்

சித்தர் பாடல்கள்-2:

கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுவதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்த நமன் என் கண்ணம்மா!
குடியோடிப் போகானோ!
– அழுகணிச் சித்தர்

சித்தர் பாடல்கள்-1: "மோகமென்ற உரலுக்குள்…"

மோகமென்ற உரலுக்குள் மனந்தான் சிக்கி
முசியாமல் இடிப்பதற்கு ஐம்பொறியும் கோல்தான்

பாகமென்ற கோபம் வந்தே உருவாய் நின்று
பதையாமற் தன்னிச்சே உலகம் எல்லாந்
தாகமென்ற ஞானம் வந்தென்ன செய்யும்?
சண்டாள இந்திரியச் சார்பி னாலே
வேகமேன்ற மனலகரி யைத்தான் கொண்டு
விண்ணுக்குளே நிற்க வெளியாய்ப் போமே.

– கைலாயக் கம்பளிச் சட்டை நாயனார்

சித்தர் பாடல்கள்-1: "மோகமென்ற உரலுக்குள்…"

மோகமென்ற உரலுக்குள் மனந்தான் சிக்கி
முசியாமல் இடிப்பதற்கு ஐம்பொறியும் கோல்தான்

பாகமென்ற கோபம் வந்தே உருவாய் நின்று
பதையாமற் தன்னிச்சே உலகம் எல்லாந்
தாகமென்ற ஞானம் வந்தென்ன செய்யும்?
சண்டாள இந்திரியச் சார்பி னாலே
வேகமேன்ற மனலகரி யைத்தான் கொண்டு
விண்ணுக்குளே நிற்க வெளியாய்ப் போமே.

– கைலாயக் கம்பளிச் சட்டை நாயனார்