நெல்லையப்பன் கவிதைகள்-70: விடுதலை

பொத்தென்று விழுந்தது மதில் சுவர்மேல்
பின்னிப் பிணைந்த குரங்கும் பாம்பும்
குரங்கின் உடலை இறுக்கியபடி பாம்பு,
பாம்பின் தலையோ குரங்குப் பிடியில்.

பிடிதளர்த்த முடியா மரணபயம் இரண்டிற்கும்;
“விட்டால் போதும்” மனநிலைக்கு வந்த பின்னும்
அதை உணர்த்த தெரியாமல் விழித்தன இரண்டும்.

மதிலின் மறுபுறம் கூக்குரலிடும் குரங்குகள்
“ஐயோ பாவம் பாம்பு” எனக் கதைக்கும்
பாம்பாட்டிக்கூட்டம் மதிலின் முன்புறம்.

வேண்டும் வேண்டும் விடுதலை வேண்டும்!
யாரிடமிருந்து யாருக்கு விடுதலையாம்?
பாம்பிடமிருந்து குரங்கிற்கா? குரங்கு பிடித்த பாம்பிற்கா?
ஒன்றின் அழிவுதான் மற்றதின் விடுதலையா?
இரண்டுக்குமான விடுதலை அங்கே சாத்தியமில்லையா?
யோசிக்க விரும்பவில்லை கு.கூட்டமும் பா.கூட்டமும்.

இன்றைய சிந்தனைக்கு-114:

திருப்போரூர்  நகரில்  பல  இடங்களில் சிந்தனையைத் தூண்டும்  பல வாசகங்கள் இதுபோல் எழுதி வைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. 

அலெக்ஸ் பக்கம்-18: கைவண்ணம்-16

மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பின் ஆங்கில இதழில் வெளியான ஒரு கவிதைக்காக  நண்பர்  அலெக்ஸ் வரைந்த படம்.  அனைவராலும் சிலாகிக்கப்பட்ட ஒரு படம்.  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-22:

என்புருகி  நெஞ்சம்  இளகிக்  கரைந்து
அன்புருவாய்  நிற்க  அலைந்தேன்  பராபரமே

யோக சித்தி-36: உலக வாழ்வு-2

ஆட்சி  பெற்றுள்ளே  அகில  விளையாட்டைக்
காட்சிபோற்  கண்டு  களி.

உன் உள்ளே,  உள்ளத்தில்  சுயாட்சி  பெறு.  உன்னை  நீ  அடக்கி  ஆள்வாயாக!  உன்  மனத்தை  வென்று  அடக்கு.  பிறகு  உலக  விளையாட்டை  நாடகக்காட்சி  போலக்  கண்டு  மகிழ்வுறு.      

My Photo Album-46: Keerthi 2

A Thought for Today-406:

Little minds are tamed and subdued by misfortune but great minds rise above them – Washington Irving

Picture of the day-229:

அலெக்ஸ் பக்கம்-17: கைவண்ணம்-15

நண்பர்  அலெக்ஸ்  வரைந்த மாமேதை டாக்டர் கென்ட் அவர்களது திருவுருவப்படம்.  நாங்கள் பெரிதும் போற்றும் ஹோமியோ மேதைகளில் ஒருவர் டாக்டர் கென்ட்.  அவரை ஹோமியோபதியின் தந்தை மாமேதை  டாக்டர் ஹானிமனுக்கு  அடுத்த இடத்தில்  வைத்துப் பெருமைப்படுவது ஹோமியோபதியர்களின் பழக்கம்.  காரைக்குடியில் கென்ட் விழா கொண்டாடியபோது அதற்காக அலெக்ஸ் வரைந்த படத்தின் ‘அவுட்லைன்’ இது.  முழுமையாக வரைந்த படம் கிடைக்காமல் போய்விட்டபடியால் இந்தக் கோட்டுச் சித்திரத்தை இங்கே பதிவு செய்கிறேன்.
கென்ட் அவர்களது உலகப் புகழ் பெற்ற மருந்து காண் ஏடு (Repertory) ஹோமியோபதியின் உயிர் நாடி.  அது மட்டுமல்ல,  ஹோமியோபதித்துறையில் எத்தனையோ புதிய மருந்துகளை அறிமுகம் செய்து, அவற்றின் மூலம் இன்றும் பல உயிர்களைக் குணப்படுத்த, பல உயிர்களைக் காக்க அவர் செய்த சேவை மகத்தானது.  அவர் ஒரு ஒப்பற்ற ஹோமியோ ஆசான்.  அவரது மற்ற சிறந்த நூல்களான ஹோமியோபதி தத்துவத்தைப் பற்றிய சிறப்புரைகள் (Lectures on Homeopathic Philosophy),  ஹோமியோபதி மருந்துகளைப் பற்றிய சிறப்புரைகள் (Lectures on Homeopathic Materia Medica) ஆகியவை இன்றும் ஹோமியோபதியர்களால் பெரிதும் போற்றப்படுபவை.

ஹோமியோபதிக்காகவே  வாழ்ந்து,  மறைந்தவர் அவர்.  அவரை இங்கே நினைவு கூர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  –  சூரி  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-21:

ஈனந்தரும்  உடலம்  என்னதியான்  என்பதற

ஆனந்தம்  வேண்டி  அலைந்தேன்  பராபரமே    

யோக சித்தி-35: உலக வாழ்வு-1

தன்னியல்பாம்  தெய்வத்  தன்மை  அறியாக்கால்  
என்ன  பயன்  இப்பிறவியே

பிறவிப் பயனென்ன?  தனது இயல்பான, உண்மையான, தெய்வத்த்தன்மையை  உள்ளாழ்ந்து  அரிய வேண்டும்.  இல்லாவிடில் இந்த உயர்வான  மானிடப்  பிறவி கிடைத்தும்  பயனில்லாததாகும்.   

A Thought for Today-405:

Four things make life worthwhile: Love, Hope, Help and Smile – Sir Walter Scott

Picture of the day-228:

Gems from the Quran-5:

An hour’s contemplation and study of God’s creation is better than a year of adoration.

Gems from the Bhagavata-4:

May the world be peaceful.  May the wicked become gentle.  May all creatures think of mutual welfare.  May their minds be occupied with what is ausipicious.  And may our hearts be immersed in selfless love for the Lord.

Gems from the Buddha-16:

Be ye lamps unto yourselves. Be ye a refuge to yourselves.  Betake yourselves to no external refuge. Hold fast to the truth as a lamp.  Hold fast as a refuge to the truth.  Look not for refuge to any one besides yourselves.

Gems from the Bible-25:

Receive my instructions, and not silver; and knowledge rather than choice gold.  For wisdom is better than rubies; and all the things that may be desired are not to be compared to it – Proverbs, The Holy Bible

இன்றைய சிந்தனைக்கு-113:

உழைப்பும், மகிழ்ச்சியும்  வாழ்நாளை  வளர்ப்பன – சிங் சௌ

அலெக்ஸ் பக்கம்-16: கைவண்ணம்-14

பிரபல  எழுத்தாளர்  கௌதம நீலாம்பரன்  அவர்கள்  நாங்கள் வருடாவருடம் நடத்தும் காரைக்குடி  புத்தகத் திருவிழாவில்  ஒரு வருடம், ஒரு நாள்  சிறப்பு  விருந்தினராக  வருகை புரிந்து, சிறப்புரையாற்றியும்,  எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.  அப்போது நண்பர் அலெக்ஸ் வரைந்த ஓவியம் இது.  கௌதம நீலாம்பரன் அவர்கள் அதைப் பாராட்டி  “நன்றி – வாழ்க வளமுடன்” என்று எழுதி தன் கையொப்பமிட்டுக் கொடுத்தார்.  அந்தப் படம்தான் நாம் மேலே காண்பது.  
நினைவலைகள் பின்னே ஓடுகிறது;  அன்று புத்தகத் திருவிழா நிகழ்ச்சிகள் முடிந்தபின் அவரை சிறப்புப் பேருந்தில் சென்னைக்கு வழியனுப்பக் காத்திருந்தபோது, நிறைய எண்ணங்களைப் பரிமாறிக்  கொண்டோம், குறிப்பாக ஆன்மீகச் சிந்தனைகளை. அப்போது அவர்,  “இவ்வளவு படித்திருக்கிறீர்கள், தெரிந்து வைத்திருக்கிறீர்கள்;   நீங்கள் ஏன் எழுதக் கூடாது” என்று என்னை எழுத ஊக்குவித்தார்.  அத்தோடு நில்லாமல் சென்னை திரும்பியபின் உற்சாகமூட்டிக் கடிதம் எழுதினார்.  ‘குங்குமச்சிமிழ்’ என்ற இதழையும், இன்னொரு இதழையும் (பெயர் மறந்துவிட்டது, மன்னிக்கவும்) அனுப்பினார்.  மேலும்  நாங்கள்  புத்தகப் பிரியர்களுக்கான  கையேடு ஒன்றை வெளியிட எண்ணியிருந்த தருணம் அது.  அதற்கு ‘தமிழில் வரலாற்றுப்  புதினங்கள்’  பற்றி ஒரு கண்ணோட்டமாக எழுதித் தரும்படி கேட்டிருந்தேன்.  அவர் உடனே அனுப்பி வைத்தார்.  ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அந்தக் கையேடு வராமலேயே போய்விட்டது.  அவருடைய நட்பை, அன்பைப் பற்றிக் கொள்ளாமல் நழுவ விட்டதை எண்ணி  இன்றும் வருந்துகிறேன் – சூரி 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-20:

முத்தாந்த  வீதி  முளரிதொழும்  அன்பருக்கே

சித்தாந்த  வீதிவரும்  தேவே  பராபரமே    

யோக சித்தி-34: உலகுயிர்-5

வேறுபாடெல்லாம்  விகற்ப  மன  மயக்காம்;
ஊறுபாடென்று  உதறித்  தள். 

மனிதனுக்கு  மனிதன்  வேறுபடுத்தும்  பிரிவினைகள்  எல்லாம்  விகற்பமுள்ள,  பிழையுள்ள  மனமயக்கமேயாகும்.  மனமயக்கத்தால் உண்டாகும்  இந்த  வேறுபாடுகள்  எல்லாம்  மனித சமுதாய  ஒற்றுமைக்கும்  முன்னேற்றத்திற்கும்  ஊறுபாடு  செய்வன,  இடையூறு செய்வன  என்று  உதறித்தள்ளு. 

Picture of the day-227:

A Thought for Today-404:

The average man develops only 10% of his latent mental ability, which means 90% remains undeveloped and untapped. 

Picture of the day-226:

இன்றைய சிந்தனைக்கு-112:

சிந்தனையும்,  செயலும்  ஒன்றாகிவிட்டால்  வாழ்க்கையில்  வெற்றியை  எளிதில்  பெற்றுவிடலாம் – இராமதாசர்

அலெக்ஸ் பக்கம்-15: கைவண்ணம்-13

ஒருமுறை  காரைக்குடி  கம்பன் மணிமண்டபத்தில் நடந்த  கம்பன் விழாவில்  கலந்துகொள்ள  முனைவர் அறிவொளி அவர்கள் வந்திருந்தார்.  என்னைப்போல், ஏன் நம்மில் பலரைப்போல், நண்பர் அலெக்சும்  முனைவர் அறிவொளி அவர்களது பரம ரசிகர். அறிவொளியவர்கள் பேச்சில் மயங்காதவர் யார் இருக்க முடியும்?   மேடையில் அவர் வீற்றிருக்க,  பார்வையாளர் வரிசையிலிருந்து நண்பர் அலெக்ஸ் அவர்கள் ஒரு சில நிமிடங்களில் மேலே உள்ள  அறிவொளி அவர்களின் படத்தை வரைந்து, பின்னர் அதை அவரிடம் காட்டி, அவரது  வாழ்த்துக்களையும் பெற்றார்.  “மிக அருளுடை வாழ்க” என்று அறிவொளியவர்கள் படத்திலேயே எழுதிக் கையொப்பமிட்டுள்ளதைக்    காணலாம்.  –  சூரி     

தாயுமானவரின் பராபரக்கண்ணி-19:

போதாந்தப்  புண்ணியர்கள்  போற்றி  சயபோற்றியெனும் 

வேதாந்த  வீட்டில்  விளக்கே  பராபரமே

யோக சித்தி-33: உலகுயிர்-4

பெண்ணின்றி  ஆணில்லை;  ஆணின்றிப்  பெண்ணில்லை;
எண்ணிருவர்  சேர்ந்தே  இகம்.  

இறை இயற்கை, சிவம் சக்தி, முதல்வன்  ஆணை,  பரம்பொருள் பராசக்தி என்று தெய்வத் தத்துவங்கள் இனிபிரியாத  இரண்டாயிருக்கின்றன.  அதுபோலவே,  உலகிலும் எல்லாத்  தோற்றங்களும்  ஆண்-பெண்ணாக  விளங்குகின்றன.  ஆண்பெண்  என்னும்  இரண்டு தத்துவங்களும்  கூடித்தான்  இவ்வுலக  வாழ்வு  நடக்கிறது.  பென்னில்லாவது  ஆணாவது,  ஆணில்லாது  பெண்ணாவது  உண்டாவதில்லை.  இரண்டும் பிரிந்தால்  வாழ்வுமில்லை; உலகுமில்லை.   

A Thought for Today-403:

The best way to conquer worry is PRAYER – Anonymous

Picture of the day-225: