கவிதை என்பது…

...கவிதை என்பது மானுடம் கண்டறிந்த எழுத்து வடிவிலான இசை. அது நம்ஆத்மத்தோடு உறவாடுவது. ஆயிரம் பக்கம் எழுதப்பட்ட நோபல் பரிசு பெற்ற ஒரு நாவல் ஏற்படுத்தும் தாக்கத்தை பத்து வரிகள் மட்டுமே கொண்ட ஒரு சிறு கவிதை ஏற்படுத்திவிடும்….

இனிய உதயம் மே மாத இதழில் கவிஞர் நா.காமராசன் நேர்காணலிலிருந்து..

நன்றி: கவிஞர் நா.காமராசன் & “இனிய உதயம்“, மாத இதழ்.

கேள்வியும் பதிலும்-26: "கவிஞன் யார்?" "எது கவிதை?"

கேட்டேன் என்பவன் சமூக மருத்துவன். பலநேரங்களில் யதார்த்தம் முன் கற்பனை உலகிலேயே வாழும் கோமாளியாகவும் வாழ்ந்து மறைந்து போகிறான். பார்த்ததைப் புதிதாய்ப் பார்ப்பவன் பாவலன். பார்த்ததை மீண்டும் பார்ப்பவன் பாமரன். கவிஞன் என்பவன் தலைசிறந்த ரசிகனாகவும் இருக்கிறான். அதேபோல் கவிதையில் புதுக்கவிதை, மரபுக்கவிதை என்ற பேதமில்லை. கவிதைகளுக்கு வார்த்தைகளே தேவையில்லை. வாசிக்கும் முன்பே புரிந்துவிடக்கூடியதுதான் கவிதை. எளிமைதான் அதன் ஆகச் சிறந்த இயல்பு. இந்த இடத்தில் எனது கவிதை ஒன்றினைப் பகிர ஆசைப்படுகிறேன்:

மொழியின்முன் மண்டியிட்டு
வார்த்தை வரம் கேட்டேன்.
அரசியல்வாதிகள் வந்து
அள்ளிக்கொண்டு
போய்விட்டார்கள்.
கட்டுரையாளர்கள் சிலர்
கேட்டு வாங்கிப்போனார்கள்.
மீதமிருந்ததை பேசவும் ஏசவும்
மனைவியர் வாங்கிப்
போனார்கள்.
தாமதமாக வந்து நிற்கிறாயே,
தமிழ்க் கவிஞனே என்று
மொழி மிகவும் வருந்தியது.
வேறு வழியின்றி வெற்றுக்
காகிதத்தை மடித்து
வழியில் என் காதலியிடம் தந்தேன்.
வாங்க மறுத்த அவள்,
நீ என்ன எழுதியிருப்பாயென
எனக்குத் தெரியுமென்றாள்.
வார்த்தைகளே இல்லாத
கவிதையை
வாசிக்காமலேயே அவள்
புரிந்துகொண்ட பிறகுதான் தெரிந்தது,
கவிதைக்கு வார்த்தைகள்
அவசியமில்லையென்று.

– “ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் நேர்காணலிலிருந்து ஒரு பகுதி”
“இனிய உதயம்”, மாத இதழ், நக்கீரன் வெளியீடு, டிசம்பர் 2008.

நன்றி: திரு எஸ்.இராதாகிருஷ்ணன் & “இனிய உதயம்”

எது கவிதை? – புதுமைப்பித்தன்

கவிதையைக் கலையின் அரசி என்பார்கள். கல்லாத கலை என்பார்கள். கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்துவிட்டால் கவியாகுமா? கவிதையின் இலட்சணங்கள் என்ன? கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு. ஆனால் அவைகளின் கூட்டுறவு மட்டும் கவிதையை உண்டாக்கிவிடாது. கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவசக்தி. அது கவிஞனது உள் மனத்தின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொறுத்துத்தான் இருக்கிறது. – புதுமைப் பித்தன்

கேள்வியும் பதிலும்-8: "எது கவிதை? – வலம்புரி ஜான்"

எது கவிதை? – வலம்புரி ஜான்

கனிக்குள்ளே
கண்ணுறங்கும் விதை!
விதைக்குள்ளே
விழித்திருக்கும் மரம்!
கூட்டுக்குள்
குறுகுறுக்கும் உயிர்ப் பறவை!
உயிர்ப் பறவை உள்ளுக்குள்
ஒளிந்திருக்கும் ஓசை!

வலம்புரி ஜானின் ‘நினைத்தால் வருவதல்ல கவிதையிலிருந்து”

ஒரு நதி குளிக்கப் போகிறது’
வலம்புரி ஜான்
அபிராமி பப்ளிகேஷன்ஸ்
307, லிங்கி செட்டி தெரு
சென்னை-600001

கேள்வியும் பதிலும்-7: "எது கவிதை? – கண்ணதாசன்"

எது கவிதை? – கண்ணதாசன்

“கவிதை என்பது உணர்ச்சியின் பிரவாகம்”. கட்டவிழ்ந்து துள்ளிவரும் சிந்தனைகள், சொற்கோலமாக விழுவதே கவிதை. உரைநடைக்கும், கவிதைக்கும் உள்ள வேறுபாடு, உரைநடை ஆற்று நடையாகவும், கவிதை அருவி நடையாகவும் வருவதுதான். கவிதையின் தனிச் சிறப்பு, தாளமும், சந்தமும் நிறைந்திருப்பதுதான்.

கவிஞர் வைரமுத்துவின் “வைகறை மேகங்களுக்கு” கண்ணதாசனின் அணிந்துரையிலிருந்து