தாயுமானவரின் பராபரக்கண்ணி-48:

எள்ளளவு  நின்னைவிட  இல்லா  எனைமயக்கில்

தள்ளுதலால்  என்னபலன்  சாற்றை  பராபரமே  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-47:

உற்றுற்று  நாடி  உளம்மருண்ட  பாவியைநீ

சற்றிரங்கி  ஆளத்  தகாதோ  பராபரமே  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-46:

இந்தநாள்  சற்றும்  இரங்கிலையேல்  காலன்வரும்
அந்தநாள்  காக்கவல்லார்  ஆர்காண்  பராபரமே

தாயுமானவரின் பராபரக்கண்ணி-45:

எத்தனைதான்  சன்மம்  எடுத்தெத்தனை  நான்பட்ட  துயர்

அத்தனையும்  நீ  அறிந்ததன்றோ  பராபரமே  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-44:

இன்று  புதிதன்றே  எளியேன்  படுந்துயரம்

ஒன்றும்  அறியாயோ  உரையாய்  பராபரமே 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-43:

நன்றறியேன்  தீதறியேன்  நான்என்று  நின்றவன்ஆர்

என்றறியேன்  நான்ஏழை என்னே  பராபரமே     

தாயுமானவரின் பராபரக்கண்ணி-42:

பாசம்போய்  நின்றவர்போல்  பாராட்டி  ஆனாலும்

மோசம்  போனேன்நான்  முறையோ  பராபரமே 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-41:

வஞ்சனையும்  பொய்யும்  உள்ளே  வைத்தழுக்காறாய்                                                                                               உளரும்

நெஞ்சனுக்கும்  உண்டோ  நெறிதான்  பராபரமே.     

தாயுமானவரின் பராபரக்கண்ணி-40:

துன்பக்  கண்ணீரில்  துளைந்தேற்குன்  ஆனந்த

இன்பக்  கண்ணீர்  வருவதென்னாள்  பராபரமே.   

தாயுமானவரின் பராபரக்கண்ணி-39:

ஐயோ  உனைக்காண்பான்  ஆசைகொண்ட  தத்தனையும்

பொய்யோ  வெளியாப்  பகராய்  பராபரமே.  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-38:

கற்றஅறிவால்  உன்னைநான்  கண்டவன்போல்  கூத்தாடிற்

குற்றமென்றென்   நெஞ்சே  கொதிக்கும்  பராபரமே.   

தாயுமானவரின் பராபரக்கண்ணி-37:

ஆழித்  துரும்பெனவே  அங்குமிங்கும்  உன்அடிமை

பாழில்  திரிவதென்ன  பாவம்  பராபரமே.    

தாயுமானவரின் பராபரக்கண்ணி-36:

எண்ணாத   எண்ணமெலாம்  எண்ணிஎண்ணி  ஏழைநெஞ்சம்

புண்ணாகச்  செய்ததினி  போதும்  பராபரமே.    

தாயுமானவரின் பராபரக்கண்ணி-35:

கன்றினுக்குச்   சேதா   கனிந்திரங்கல்  போலஎனக்

கென்றிரங்கு   வாய்கருணை  எந்தாய்  பராபரமே.  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-34:

உள்ளம்  அறிவாய்  உழப்பறிவாய்  நான்ஏழை

தள்ளிவிடின்  மெத்தத்  தவிப்பேன்  பராபரமே.   

தாயுமானவரின் பராபரக்கண்ணி-33:

கடல்அமுதே  தேனேஎன்  கண்ணே  கவலைப்

படமுடியாது  என்னைமுகம்  பார்நீ  பராபரமே.   

தாயுமானவரின் பராபரக்கண்ணி-32:

கூர்த்த  அறிவத்தனையும்  கொள்ளைகொடுத்து  உன்னருளைப்

பார்த்தவன்நான்  என்னைமுகம்  பாராய்  பராபரமே.     

தாயுமானவரின் பராபரக்கண்ணி-31:

ஓகோ   உனைப்பிரிந்தார்  உள்ளம்  கனலில்வைத்த

பாகோ  மெழுகோ  பகராய்  பராபரமே.   

தாயுமானவரின் பராபரக்கண்ணி-30:

ஓயாதோ  என்கவலை  உள்ளே  ஆனந்தவெள்ளம்

பாயாதோ  ஐயா  பகராய்  பராபரமே.   

தாயுமானவரின் பராபரக்கண்ணி-29:

பாராயோ  என்னைமுகம்  பார்த்தொருகால்  என்கவலை

தீராயோ  வாய்திறந்து  செப்பாய்  பராபரமே.   

தாயுமானவரின் பராபரக்கண்ணி-28:

சொல்லால்   அடங்காச்   சுகக்கடலில்  வாய்மடுக்கின்

அல்லால்  என்தாகம்  அறுமோ  பராபரமே.    

தாயுமானவரின் பராபரக்கண்ணி-27:

உற்றறியும்  என்னறிவும்  உட்கருவி  போற்சவிமாண்

டற்றுமின்பம்  தந்திலையே  ஐயா  பராபரமே.     

தாயுமானவரின் பராபரக்கண்ணி-26:

அப்பாஎன்  எய்ப்பில்வைப்பே  ஆற்றுகிலேன்  போற்றிஎன்று

செப்புவதல்லால்  வேரென்  செய்வேன்  பராபரமே.      

தாயுமானவரின் பராபரக்கண்ணி-25:

தாகமறிந்து  இன்பநிட்டை  தாராயேல்  ஆகெடுவேன்

தேகம்  விழுந்திடின்  என்செய்வேன்  பராபரமே.      

தாயுமானவரின் பராபரக்கண்ணி-24:

மாறா  அநுபூதி  வாய்க்கின்  அல்லால்  என்

சித்தம்  தெளியாதென்   செய்வேன்  பராபரமே.  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-23:

சுத்த  அறிவாய்ச்  சுகம்பொருந்தின்அல்லால்  என்

சித்தம்  தெளியாதென்    செய்வேன்  பராபரமே.  
   

தாயுமானவரின் பராபரக்கண்ணி-22:

என்புருகி  நெஞ்சம்  இளகிக்  கரைந்து
அன்புருவாய்  நிற்க  அலைந்தேன்  பராபரமே

தாயுமானவரின் பராபரக்கண்ணி-21:

ஈனந்தரும்  உடலம்  என்னதியான்  என்பதற

ஆனந்தம்  வேண்டி  அலைந்தேன்  பராபரமே    

தாயுமானவரின் பராபரக்கண்ணி-20:

முத்தாந்த  வீதி  முளரிதொழும்  அன்பருக்கே

சித்தாந்த  வீதிவரும்  தேவே  பராபரமே    

தாயுமானவரின் பராபரக்கண்ணி-19:

போதாந்தப்  புண்ணியர்கள்  போற்றி  சயபோற்றியெனும் 

வேதாந்த  வீட்டில்  விளக்கே  பராபரமே