பாரதி கவிதைகள்-3:

விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
வேண்டியபடி செலும் உடல்கேட்டேன்;
நசையறு மனம் கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்;
தசையினைத் தீ சுடினும் – சிவ
சக்தியைப் பாடும் நல் அகங் கேட்டேன்;
அசைவறு மதி கேட்டேன் – இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

(பாரதியின் “நல்லதோர் வீணையிலிருந்து” ஒரு பகுதி).

Leave a comment