Book of the day-12: ‘Life after Death’ by Deepak Chopra

  Grateful thanks to Dr Deepak Chopra and YouTube.

Picture of the day-36:


A Thought for Today-225:

Travel light, live light, spread the light, be the light – Yogi Bhajan

நல்வழி-2:

புண்ணியமாம் பாவம்போம் போனநாள் செய்தவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.

எல்லா மதங்களுமே தீயவற்றை விளக்கி நல்லதை மட்டுமே செய்க என்று அறிவுறுத்துகின்றன.

பாரதி கவிதைகள்-18: "அறிவே தெய்வம்"

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்
பல்லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்டாம்
எனல் கேளீரோ?

மாடனைக் காடனை வேடனை போற்றி
மயங்கும் மதியிலிகாள்
எதனூடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வம்
என்றோதி அறியீரோ?

சுத்த அறிவே சிவமென்று கூறும்
சுருதிகள் கேளீரோ? – பல
பித்த மதங்களிலே தடுமாறிப்
பெருமை அழிவீரோ?

வேடம் பல்கோடியோர் உண்மைக்கு உளவென்று
வேதம் புகன்றிடும்ஆங்கோர்
வேடத்தை நீருண்மை என்று கொள்வீரென்று அவ்
வேதம் அறியாதே.

நாமம் பல்கோடியோர் உண்மைக்கு உளவென்று
நான்மறை கூறிடுமேஆங்கோர்
நாமத்தை நீர் உண்மையென்று கொள்வீரென்று அந்
நான்மறை கண்டிலதே.

போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணும் நிலையாமேஉப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெல்லாம்நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ?

உள்ளது அனைத்திலும் உள்ளொளி ஆகி
ஒளிந்திடும் ஆன்மாவேஇங்கு
கொள்ளற் கரிய பிரமமென்றே மறை
கூவுதல் கேளீரோ?

மெல்லப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப்பல
கள்ள மதங்கள் பரப்புதற்கோர் மறை
காட்டவும் வல்லீரோ?

ஒன்று பிரமமுள்ளது உண்மை அஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்என்றும்
ஒன்று பிரமமுள்ளது உண்மை அஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.

மேகமே மேகமே-5:

விக்கிபீடியாவில் மேகத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? ‘முகில்என்ற தலைப்பில் சுருக்கமாக உள்ளத்தைக் காண: http://ta.wikipedia.org/wiki/முகில்.

ஆங்கிலத்தில் விலாவாரியாகக் காண: http://en.wikipedia.org/wiki/Cloud. (சிறந்த படங்களுடன்). மேல்நிலை, நடுநிலை, கீழ்நிலை என்று எத்தனை பிரிவுகள்! குமுலஸ், நிம்பஸ், சிர்ரஸ், ஸ்ரேடஸ் என்று எத்தனை வகைகள்!! எத்தனை அறிவியல் விளக்கங்கள்! கண்டு, படித்து மகிழுங்கள்.

நன்றி: Wikipedia, the free encyclopedia.

இன்றைய சிந்தனைக்கு-68:

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.

அன்புதான் மனித சமுதாயத்தின் அடிப்படை. அன்புதான் ஒருவரையொருவர் விரும்புகின்ற ஆசையை உண்டாக்குவது. அந்த ஆசையினால்தான் நட்பு என்கின்றன உறவு தானாக உண்டாகின்றது. அதனால்தான் சமுதாயம் அமைகிறது. (நாமக்கல் கவிஞரின் தெளிவுரையிலிருந்து).