பட்டுக்கோட்டை பாடல்-8: "கண்ணில் கருணை"

உள்ளும் புறமுமாகி ஒளியாகிஞான
வெளியாகி நின்ற உமையே!
துள்ளும் கலைகளாகித் துளியாகிக் கடலாகித்
தெளிவாக நின்ற திருவே!

அல்லும் பகலுமாகி அறமாகித் தரமாகி
வளமாகி வந்த வடிவே!
அனுதினமும் உனதுமலரடி இணையில் இணையுமெனை
ஆண்டருள்வாய் அம்மையே!

கையிலே சூலமும் கண்ணிலே கருணையும்
கனிவாயில் அன்பு நகையும்
கொய்யாத மலர்முகமும் குலுங்குநவமணி அழகுங்
கொண்ட தாயே!

மைபோன்ற இருட்டிலே வையகமும் மாந்தரும்
மயங்கும் வேளை
மெய்யிலே அறிவெனும் விளக்கேற்றி வைத்தநீ
விடுதலை வழங்குவாயே!

பாரதி கவிதைகள்-20: "கண்ணபெருமானே"

காயிலே புளிப்பதென்ன கண்ண பெருமானேநீ
கனியிலே இனிப்பதென்ன கண்ண பெருமானே
நோயிலே படுப்பதென்ன கண்ண பெருமானேநீ
நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பெருமானே
காற்றிலே குளிர்ந்ததென்ன கண்ண பெருமானேநீ
கனலிலே சுடுவதென்ன கண்ண பெருமானே
சேற்றிலே குழம்பலென்ன கண்ண பெருமானேநீ
திக்கிலே தெளிந்ததென்ன கண்ண பெருமானே
ஏற்றி நின்னைத் தொழுவதென்ன கண்ண பெருமானேநீ
எளியர் தம்மைக் காப்பதென்ன கண்ண பெருமானே
போற்றினோரைக் காப்பதென்ன கண்ண பெருமானேநீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்ன கண்ண பெருமானே.

நல்வழி-4:

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக் ஏலென்றால் ஏலாய்ஒருநாளும்
என்நோய் அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.

இன்றைய சிந்தனைக்கு-71:

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

இயற்கை உணவுக் குறிப்பு-7: "மாதுளைச்சாறு"

மாதுளைச்சாறு தொடர்ந்து பருகுவது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். வேண்டாத கொழுப்பைக் கரைக்கும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும்.

வீடீயோ கவிதைகள்-5:கவி ரூபனின் "நெஞ்சு பொறுக்குதில்லையே"

கவி ரூபனின்நெஞ்சு பொறுக்குதில்லையே” – இலங்கை வானொலி கவியரங்கிற்காக எழுதியது.

நன்றி: கவி ரூபன் & YouTube.

நெஞ்சில் நிலைத்த பாடல்கள்-7:

Grateful thanks to aravindhand and YouTube.